ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு உள்ள இரண்டு சந்தேகநபர்களும் கொலை நடந்த சமயம் பிறிதொரு இடத்தில் நின்றதாக சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, ‘நகர்த்தல் பத்திரம்’ தாக்கல் செய்யப்பட்டதன் மூலம் குறித்த வழக்கினை, நேற்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் விசாரணைக்கு எடுத்துக்கொண்டார். இதன்போது சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, சந்தேகநபர்களில் ஒருவர் கொலை நடந்த சமயம் மருதனார்மடத்தில்