தமிழக ஆறுகளில் தடுப்பணை கட்டும் ஆந்திரா-கேரளாவை மத்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
கேரளாவும், ஆந்திராவும் தமிழகத்துக்கு வருகிற தண்ணீரை தடுக்கும் வகை யில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது. இதை போக்க சுகாதாரத்துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இலங்கை சிறையில் இருக்கும் 25 மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்து வைத்துள்ள 123 படகு களை மீட்பதற்கான நட வடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
எண்ணூர் அருகே கப்பல் கள் மோதி கடலில் சிதறி இருக்கும் எண்ணை படிமங் களால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மீனவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அந்த பகுதியை இன்று மாலை பார்வையிடுகிறேன். அதன்பிறகு அதுபற்றிய விவரங்களை தெரிவிப்பேன்.
மத்திய பா.ஜனதா அரசு மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை. தமிழ கத்தில் ஜல்லிக்கட்டு நடத்து வதற்கான உரிமை கிடைத் துள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு குழுவினர் என்னை சந்தித்து ஜல்லிக் கட்டு விழாவுக்கு அழைத் துள்ளனர். அங்கு செல்வது பற்றி மற்ற நிர்வாகிகளுடன் பேசி முடிவு செய்வேன்.இவ்வாறு அவர் கூறி னார்.

