விண்வெளி ஆராய்ச்சியில் 7 ஜி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது – இஸ்ரோ விஞ்ஞானி தகவல்

277 0

திருச்சி ஜோசப் கல்லூரியில் கணினி அறிவியல் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் உலக கணினி பயன்பாடு தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் பற்றிய சர்வதேச கருத்தரங்கம் நடந்தது.

இந்த கருத்தரங்கில் சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனரும் இஸ்ரோவின் செவ்வாய் கிரக திட்ட ஒருங்கிணைப்பாளருமான குன்னி கிருஷ்ணன் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.

இஸ்ரோ இதுவரை 56 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டு மட்டும் 9 முறை செயற்கைகோள்கள் ஏவப்பட்டு உள்ளன.

இதில் 7 செயற்கை கோள்கள் நிலை நிறுத்தப்பட்டது. இது இஸ்ரோவின் வரலாற்று சாதனையாகும்.

இதுவரை பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய 2 ராக்கெட்டுகள் துணையுடன் மட்டுமே செயற்கை கோள்கள் அனுப்பப்பட்டு வருகிறது. ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் துணையுடன் வருகிற 15ஆம் திகதி புதிய செயற்கை கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது.

ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 என்ற ராக்கெட் தற்போது முழுக்க இந்திய தொழில் நுட்பத்தில் தயாராகி வருகிறது. இன்னும் 6 மாதத்தில் இந்த பணி வெற்றிகரமாக முடிவடைந்து விண்ணில் ஏவப்படும்.

செவ்வாய் கிரக சுற்று வட்ட பாதையில் செயற்கை கோளை நிலை நிறுத்தியது இந்தியா தான் என்பது பெருமைக்குரியதாகும். இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தற்போது ‘7 ஜி’ தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொழில் நுட்பத்தில் மேலும் பல புதிய வசதிகளை சேர்த்து ஸ்மார்ட் போன் தயாரித்து வருகிறோம்.

வரும் காலங்களில் நமது உடலில் எந்த பாகத்தில் வேண்டுமானாலும் பொருத்திக்கொண்டு செல்போனை பயன்படுத்தும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறதுஎன தெரிவித்தார்.