கடலில் எண்ணெய் கசிவு – மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

286 0

சென்னையை அடுத்த எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் கடந்த 27ஆம் திகதி நள்ளிரவு ஈரான் நாட்டு கப்பல் வெளியேறியபோது சரக்கு கப்பல் மீது மோதியது.

சேதம் அடைந்த சரக்கு கப்பலில் இருந்து டீசல் கடலில் கொட்டியது.

சென்னையையொட்டி உள்ள கடற்பரப்பில் எண்ணெய் மிதந்தது. திருவொற்றியூர் பாரதியார் நகர் அருகே கடல்பகுதியில் அதிகளவு எண்ணெய் படிந்து இருக்கிறது. அதை அகற்றும் பணி கடந்த 8 நாட்களாக நடந்து வருகிறது.

திருவொற்றியூர் பாரதி நகரில் கடலில் பரவிய எண்ணெய் அகற்றும் பணியை இன்று தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

எண்ணெய் அகற்றும் பணி எப்படி நடக்கிறது என்று பார்வையிட்டு அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார்.

கடந்த ஒரு வாரம் காலமாக கடலில் எண்ணெய் மிதப்பதால் மீன் வளம், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட் டுள்ளது. இதனால் மீனவர்கள் பெரும் கவலையில் உள்ளனர். மீன்வளம் பாதிப்பு ஒரு புறம் இருந்தாலும், சுற்றுச்சூழல் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.