விளம்பரத்திற்காக அரசாங்கத்தை விமர்சிக்கின்றார் சீ.வி.-மைத்திரி குற்றச்சாட்டு!

Posted by - February 6, 2017

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நீதியரசராக இருந்தபோது கௌரவமாக இருந்தார். தற்போது முதலமைச்சராகிய பின்னர் விளம்பரத்திற்காக அரசாங்கத்தை விமர்சித்து வருவதாக முன்னாள் தென் மாகாணசபை உறுப்பினர் மைத்திரி குணரத்ன கூறியுள்ளார்.

சமல் ராஜபக்ச அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையில்

Posted by - February 6, 2017

ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் சபாநாயகரும் மகிந்த ராஜபக்சவின் மூத்த சகோதரருமான சமல் ராஜபக்ச அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற விசேட பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.

யாழ்ப்பாணம் வேலனை பகுதியில் விபத்து, இளம்குடும்பஸ்தர் ஒருவர் பலி

Posted by - February 6, 2017

யாழ்ப்பாணம் வேலனை பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இளம்குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி காயமடைந்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.வேலனை அராலி சந்தியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேலனையில் இருந்து ஊர்காவற்றுறை பிரதான வீதியை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி சென்ற டிப்பர் வாகனமும் மோதியுள்ளது. இதன்போது டிப்பர் வாகனம் மோட்டார் சைக்கிளை சிறிது தூரம் இழுத்து

கிழக்கிலங்கையில் நடைபெறவுள்ள எழுக தமிழ் நடைபவனியில், தமிழ் பேசும் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு

Posted by - February 6, 2017

கிழக்கிலங்கையில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் நடைபவனியில், தமிழ் பேசும் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் அண்மையில் இருந்து நாவற்குடா விவேகானந்தா விளையாட்டுக் கழகத்திடல்வரை இம்மாதம் 10ஆம் திகதி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் நடைபவனியில், இனம், மதம் சாராமல் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வடக்கு

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு(காணொளி)

Posted by - February 6, 2017

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் விளக்கமறியல் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி மா.கணேசராஜா முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியபோது நீதவான், விளக்கமறியலை நீடித்து உத்தரவு பிறப்பித்தார். குறித்த கொலையுடன் தொடர்புடைய ஏனைய சந்தேக

பெரியப்புலம் மகாவித்தியாலய சமையல் கூட கட்டடத் தொகுதியில் தீ(காணொளி)

Posted by - February 6, 2017

யாழ்ப்பாணம் பெரியப்புலம் மகாவித்தியாலய சமையல் கூட கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீப்பரவலால் கட்டடம் முற்றாக சேதமடைந்துள்ளது. பெரியப்புலம் மகாவித்தியாலயத்தின் சமையல் கூடம் உள்ளிட்ட கட்டடத் தொகுதியில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் உடனடியாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புச் சேவையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் சென்றபோதும் தீயணைப்பு படையினரின் வாகனம், சமையல் கூட வளாகத்தினுள் செல்லமுடியாத நிலை எற்பட்டமையினால் தீயணைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டதாகவும் நீண்ட நேரப் போராட்டத்தின் பின்னர்

புனரமைப்பு செய்யக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு உருவாகுமானால் நாட்டில் அனைவரும் ஒரு தாய்பிள்ளைபோல் வாழும் நிலையேற்படும்- கி.துரைராஜசிங்கம் (காணொளி)

Posted by - February 6, 2017

  அந்நியர்கள் நாட்டிற்குள் வருவதற்கு முன்பு நாம் எவ்வாறு இருந்தோமோ அந்த நிலையினை மீள்வித்து புனரமைப்பு செய்யக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு உருவாகுமானால் நாட்டில் அனைவரும் ஒரு தாய்பிள்ளைபோல் வாழும் நிலையேற்படும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பில் இருந்துவெளிவரும் தென்றல் சஞ்சிகையின் 32வது இதழின் அறிமுக நிகழ்வும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வும் மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது. கல்லடி புதிய கல்முனை வீதியில் உள்ள தென்றல்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற உடல்நல மேம்பாட்டு நிகழ்வு(காணொளி)

Posted by - February 6, 2017

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற உடல்நல மேம்பாட்டு நிகழ்வு இன்று காலை பிரதேச செயலக முன்னிலையில் நடைபெற்றது. மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வினை மண்முனை வடக்கு விளையாட்டு உத்தியோகத்தர் பிரசாத் நடாத்தினார். இதன்போது உடல்நல மேம்பாட்டு வாரம் தொடர்பிலான தெளிவுபடுத்தலை பிரதேச செயலாளர் மேற்கொண்டதுடன் உடற்பயிற்சியை விளையாட்டு உத்தியோகத்தர் மேற்கொண்டார். இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், உதவிதிட்டமிடல் பணிப்பாளர் உட்பட பிரதேச செயலக ஊழியர்கள்

கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள அணுகு வசதியை, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலை(காணொளி)

Posted by - February 6, 2017

கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள அணுகு வசதியை, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அணுகு வழி வசதி வழியின் சரிவுத்தன்மை, மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் செல்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்படவில்லை என்றும் மாற்றுத்திறனாளிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன் பொதுக் கட்டடங்களில் அணுகு வசதி அமைக்கப்பட வேண்டும் என்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதும்  பெரும்பாலான இடங்களில்  அவை நடைமுறைப்படுத்தபடுவதில்லை என்றும், இதனால் தங்களின் சுந்திரமான நடமாட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர். சில பொதுக்கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளின்

வவுனியாவில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்(காணொளி)

Posted by - February 6, 2017

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான போராட்டமொன்று இன்று வவுனியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒன்றிணைவோம், கைகொடுப்போம், போராடுவோம் என்ற தொனிப்பொருளில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், குறித்த போராட்டம் வவுனியாவில் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக இன்று காலை 10 மணியளவில் ஒன்றுகூடிய அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர், நல்லாட்சி அரசாங்கம் கல்வி, சுகாதாரத்தினை அழிப்பதாகவும், மக்களே உரிமைகளை வென்றெடுத்திட போராடுவோம் என்றும் கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இன்றைய தினம், மருத்துவ பீட மாணவர்கள்