கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள அணுகு வசதியை, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலை(காணொளி)

258 0

கிளிநொச்சி புகையிரத நிலையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கென அமைக்கப்பட்டுள்ள அணுகு வசதியை, மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அணுகு வழி வசதி வழியின் சரிவுத்தன்மை, மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலியுடன் செல்வதற்கு ஏற்ற வகையில் அமைக்கப்படவில்லை என்றும் மாற்றுத்திறனாளிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் பொதுக் கட்டடங்களில் அணுகு வசதி அமைக்கப்பட வேண்டும் என்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதும்  பெரும்பாலான இடங்களில்  அவை நடைமுறைப்படுத்தபடுவதில்லை என்றும், இதனால் தங்களின் சுந்திரமான நடமாட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாற்றுத்திறனாளிகள் தெரிவித்துள்ளனர்.

சில பொதுக்கட்டடங்களில் மாற்றுத்திறனாளிகளின் மேல் மிகவும் அக்கறை செலுத்தி அணுகும் வசதிகள் மாபிள்கள் பதித்து அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் அவ்வாறு அமைக்கப்படும் வழியை தங்களால் பயன்படுத்த முடியாத நிலையே ஏற்பட்டுள்ளதும் என்றும் மாற்றுத்திறனாளிகள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.