பெரியப்புலம் மகாவித்தியாலய சமையல் கூட கட்டடத் தொகுதியில் தீ(காணொளி)

327 0

யாழ்ப்பாணம் பெரியப்புலம் மகாவித்தியாலய சமையல் கூட கட்டடத் தொகுதியில் ஏற்பட்ட தீப்பரவலால் கட்டடம் முற்றாக சேதமடைந்துள்ளது.

பெரியப்புலம் மகாவித்தியாலயத்தின் சமையல் கூடம் உள்ளிட்ட கட்டடத் தொகுதியில் நேற்று இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் உடனடியாக யாழ்ப்பாணம் மாநகர சபையின் தீயணைப்புச் சேவையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் சென்றபோதும் தீயணைப்பு படையினரின் வாகனம், சமையல் கூட வளாகத்தினுள் செல்லமுடியாத நிலை எற்பட்டமையினால் தீயணைப்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டதாகவும் நீண்ட நேரப் போராட்டத்தின் பின்னர் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாவும் யாழ்.மாநகர சபையின் தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை தீப்பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.