புனரமைப்பு செய்யக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு உருவாகுமானால் நாட்டில் அனைவரும் ஒரு தாய்பிள்ளைபோல் வாழும் நிலையேற்படும்- கி.துரைராஜசிங்கம் (காணொளி)

257 0

 

அந்நியர்கள் நாட்டிற்குள் வருவதற்கு முன்பு நாம் எவ்வாறு இருந்தோமோ அந்த நிலையினை மீள்வித்து புனரமைப்பு செய்யக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு உருவாகுமானால் நாட்டில் அனைவரும் ஒரு தாய்பிள்ளைபோல் வாழும் நிலையேற்படும் என கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இருந்துவெளிவரும் தென்றல் சஞ்சிகையின் 32வது இதழின் அறிமுக நிகழ்வும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வும் மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்றது.

கல்லடி புதிய கல்முனை வீதியில் உள்ள தென்றல் அலுவலகத்தின் முன்பாக தென்றல் ஆசிரியர் க.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது தென்றல் ஆசிரிய பீடத்தினை சேர்ந்த திருமதி கவிதா கிருபாகரன் தென்றல் 32வது இதழை பிரதம அதிதிக்கு வழங்கிவைத்து நூல் அறிமுகத்தை மேற்கொண்டார் அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சிறப்பான சித்திகளைப்பெற்ற மாணவர்கள் பதக்கம் அணிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் அந்நியர்கள் இங்கு வருவதற்கு முன்பாக நாங்கள் எந்த நிலையில் இருந்தோமோ அந்த நிலையினை மீள்வித்து புனரமைப்பு செய்யக்கூடிய வகையில் புதிய அரசியலமைப்பு உருவாகுமானால் இந்த நாட்டில் அனைவரும் ஒரு தாய்பிள்ளைபோல் வாழும் நிலையேற்படும் என தெரிவித்துள்ளார்,