கிழக்கிலங்கையில் நடைபெறவுள்ள எழுக தமிழ் நடைபவனியில், தமிழ் பேசும் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு

284 0

கிழக்கிலங்கையில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் நடைபவனியில், தமிழ் பேசும் அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தின் அண்மையில் இருந்து நாவற்குடா விவேகானந்தா விளையாட்டுக் கழகத்திடல்வரை இம்மாதம் 10ஆம் திகதி நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் நடைபவனியில், இனம், மதம் சாராமல் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வடக்கு முதல்வர், ‘எங்களிடம் இருந்து கிடைக்கும் பாதுகாப்பு உங்களுக்குத் தமிழர்களிடம் இருந்து கிடைக்காதுஎன்று கூறி தமிழ்ப் பேசும் முஸ்லிம் மக்களிடையே சந்தேகங்களையும் ஐயப்பாடுகளையும்வளர்க்கப் பார்க்கின்றார்கள்.

இவற்றையெல்லாம் களையவே, அனைத்துத் தமிழ்ப் பேசும் மக்களிடையேயும் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் தற்போது எழுந்துள்ளது.

அரசியல் தீர்வு பற்றிப் பேசும் போது தமிழ்ப் பேசும் மக்கள் யாவருமே கூட்டாட்சியாகிய சமஷ்டிமுறையே சிறந்தது என்பதில் உறுதியாக இருக்கின்றார்கள். ஆனால் கடந்த கால நிகழ்வுகளின்காரணமாகவோ வேறு காரணங்களுக்காகவோ தமிழ்ப் பேசும் முஸ்லீம் மக்கள் உறுதி தளர்ந்துகாணப்படுகின்றார்கள்.

வடகிழக்கு மாகாணங்கள் பாரம்பரியமாகத் தமிழ் மொழி பேசப்பட்டு வந்த மாகாணங்களேஎன்பதை உத்தியோகபூர்வமாகப் பதிந்து வைத்திருப்பது அத்தியாவசியம் என்பது தற்பொழுதுஎல்லாத் தமிழ்ப் பேசுந் தரப்பாருக்கும் புரிகின்றது. ஆனால் சந்தேகங்கள், ஐயப்பாடுகள்,மக்களை ஒருங்கிணைக்கவிடாது தடுக்கின்றன.

“எழுக தமிழ்” அரசியல் சார்ந்தது ஆனால் அரசியற் கட்சிகள் சார்ந்ததல்ல. சமூகம் சார்ந்ததுஆனால் சமயங்கள் சார்ந்ததல்ல. தமிழ் மொழி சார்ந்தது ஆனால் தமிழ் மொழியல்லாதவற்றைப்புறக்கணிக்காதது.

தமிழ்மொழிக்கும் அதைப் பேசும் மக்களுக்கும் தக்க ஏற்பினை வழங்க வேண்டும் என்று கேட்டே“எழுக தமிழ்” இம்மாதம் 10ந் திகதி நாவற்குடா விவேகானந்தா விளையாட்டுக் கழகத்திடலில்நடைபெற இருக்கின்றது. அதில் சகலரும் பங்குபற்ற வேண்டும் என்று கோருவதுடன், எமது ஒற்றுமையினை உலகறியச் செய்ய இது ஒரு நல்ல தருணம் என்று கூறி வைக்கின்றேன்”–என்றும் குறிப்பிட்டுள்ளார்.