யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி(காணொளி)
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று நடைபெற்றது. கல்லூரி மைதானத்தில், கல்லூரி அதிபர் எஸ்.கே.எழில்வேந்தன் தலைமையில் நடைபெற்ற குறித்த விளையாட்டுப் போட்டியில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.தெய்வேந்திரராஜா கலந்து சிறப்பித்தார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுநர் போட்டியில், மஞ்சள், பச்சை, நாவல், பிறவுண், நீலம் ஆகிய நிறங்களிலுள்ள இல்லங்களிலிருந்து மாணவர்கள் போட்டியில் பங்கு பற்றினர். குறித்த போட்டியில் முதலாம் இடத்தை மஞ்சள் இல்லமும், இரண்டாம் இடத்தை நீல இல்லமும்,

