யாழ் நல்லிணக்கபுர  வீட்டுதிட்டத்தில் நாங்களாக விரும்பி குடியேறவில்லை மக்கள் தெரிவிப்பு

375 0

கீரிமலையில் மீள்குடியேற்ற அமைச்சின் நிதி உதவியுடன் இராணுவத்தினரால் அமைத்து கொடுக்கப்பட்ட வீட்டு திட்டத்தில் நாங்கள் விரும்பி நல்லிணக்கபுரத்தில் குடியேறவில்லை வெளிநாடுகளுக்கு இங்கு முகாம்கள் எதுவும் இல்லை என்பதை வெளிக் காட்டுவதற்கே அரசு அவசரமாக மீள் குடியேற்றியது என நல்லிணக்கபுர கிராம மக்கள் தெரிவித்தனர்.

இந்த அரசுக்கு மீள் குடியேற்றம் தொடர்பாக விளக்கம் இல்லையா?ஒரு இடத்தில மக்களை குடியேற்றப் போகின்றார்கள் என்றால் முதலில் அந்த இடத்தை ஆய்வு செய்ய வேண்டும்.அதன் பின்னர் அந்த சூழலை பாதுகாக்குக்கு உகந்ததா மக்கள் வாழக்கூடிய சூழலா என்பதை பார்க்க வேண்டும்.வீடுகள் கட்டப்படும் போது அந்த வீடுகளின் அமைவிடங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பார்க்க வேண்டும்.எங்கள் வீடுகளின் அமைவிடத்தை அவதானித்துப் பாருங்கள் எங்கள் வீட்டு முற்றத்துக்கு முன்பாக பாரிய குழிகள் காணப்படுகின்றன.

எங்கள் சிறுவர்களை நாங்கள் எவ்வாறு இந்த வீட்டில் வைத்து வளர்ப்பது என்று தெரியவில்லை.முகாமில் இருந்திருந்தால் கூட நாம் ஓரளவு நிமதியாக இருந்தோம்.வெளிநாடுகளுக்கு யாழ்ப்பான மாவட்டத்தில் முகாம்கள் இல்லை என்பதை காட்டுவதற்காக அவசர அவசரமாக ஒரு இடத்தில கொண்டுவது குடியேற்றி விடுகின்றனர்.இந்த நடவடிக்கைக்கும் இதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கும் அரசே பொறுப்புக் கூற வேண்டும்.

நாங்கள் எங்கள் முகாமிலிருந்து இங்கு குடியமர வருவதற்கு முன்னரே இந்த கழிவு என்னைத் தொட்டியை மூடிதருமாறு அதிகாரிகளிடமும் இராணுவத்திடமும் கேட்டிருந்தோம்.ஆனால் இரண்டு தரப்பினரும் அதனை செய்து தரவில்லை.

அன்று அவர்கள் இந்த தொட்டியை மூடியிருந்தால் நடந்த உயிரிழப்பை தடுத்திருக்கலாம்.மேலும் உயிரிழப்புக்கள் இடம்பெறாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் உடனடியாக இந்த கழிவு நீர் தொட்டியை மூடித்தருமாறு அதிகாரிகளிடமும் இராணுவத்திடமும் கேட்டுக் கொள்கின்றோம்.எமது நல்லிணக்க புர கிராமத்தில் 150 க்கும்   சிறுவர்கள் வசித்து வருகின்றார்கள்.இவர்களை நாம் எவ்வாறு பாதுகாப்பது.எனவே எங்களுக்கு இங்கு உரிய பாதுகாப்புக்கள் இல்லை.என்றனர்.