ஆறாவது நாளாக தீர்வற்று தொடரும் புதுக்குடியிருப்பு நில மீட்பு போராட்டம்

456 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் நகரப்பகுதியில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு வலியுறுத்தியும் கேப்பாபிலவு  பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துக்கு முன்னாள்  பொதுமக்கள் முன்னெடுக்கும் போராட்டம் ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது.

புதுக்குடியிருப்பு பிரதேசசெயலத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தமது சொந்த காணிகளிற்குள் கால் பதிக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு கலைஞர் கழகம், விளையாட்டு கழகம், மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்