சிவப்பு நாடு நெல்லை கொள்வனவு செய்ய விரும்புவோர் கிளிநொசசியில் உள்ள நெல் சந்தைப்படுத்தும் சபையுடன் தொடர்புகொள்ளவும்- அரசாங்க அதிபர்

322 0

சிவப்பு நாடு நெல்லை கொள்வனவு செய்ய விரும்புவோர் கிளிநொசசியில் உள்ள நெல் சந்தைப்படுத்தும் சபையுடன் தொடர்புகொள்ளமாறு யாழப்பாண .மாவட் அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

2014ஆம், 2015ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டு பெரும்போகங்களில் நெல் சந்தைப்படுத்தல் சபையால் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியசாலையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள சிவப்பு நாடு நெல் 49ரூபா 25 சதத்திற்கு விற்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நெல்லை கொள்வனவு செய்ய விரும்புவோர் கிளிநொச்சியில் உள்ள நெல் சந்தைப்படுத்தல் பிராந்திய காரியலயத்தில் விண்ணப்பப் படிவத்தை பெற்று நெல் சந்தைப்படுத்தல் சபையின் கொழும்பு காரியாலயத்திற்கு நாளைய தினத்திற்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கொள்வனவாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலதிக விபரங்களுக்கு கிளிநொச்சி நெல் சந்தைப்படுத்தல் பராந்திய காhரியாலயத்தின் 0212060913 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.