மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.தொலைபேசி ஊடாக மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ரஞ்சன் ராமநாயக்க ஊடகமொன்று தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத மண் வர்த்தகத்தில் ஈடுபடும் தரப்பினர் இவ்வாறு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்விரோத மண் அகழ்விற்கு எதிராக போராடி வரும் தமக்கு பாதாள உலகக் குழுவினரைக் கொண்டு இந்த வர்த்தகர்கள் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர் எனவும் இது தொடர்பில் பாதுகாப்புச் செயலாளரிடமும் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.
எனினும் சட்டவிரோத மண் அகழ்விற்கு எதிரான போராட்டங்களை தாம் கைவிடப் போவதில்லை எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

