அக்கரைப்பற்று பகுதியில் சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு மறைத்துவைக்கப்பட்டிருந்த புகையிலைத்தூள் மூடைகளை மதுவரித்திணைக்களத்தினர் கைப்பற்றினர்(காணொளி)

Posted by - February 9, 2017

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரனுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த புகையிலைத்தூள் மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று கருங்கொடித்தீவு, தபாலக வீதியில் இந்தியாவின் ஒடிசா பகுதியில் இருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்டு மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த முற்றுகை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மட்டக்களப்பு-அம்பாறை மாவட்ட மதுவரித்திணைக்கள அத்தியட்சகர் என்.சுசாதரனின் வழிகாட்டலில், கல்முனை பிரதேச பிரதான பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தலைமையில், மதுவரித்திணைக்கள பரிசோதகர்களான பி.செல்வகுமார், கே.வாசன், மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்களான எஸ்.குகனேசன், எஸ்.ஜனானந்தா, கே.செந்தில்வர்ணன், எஸ்.செல்வராஜா, கே.ரஜனிகாந்த், தனஞ்செயன் ஆகியோர் கொண்ட குழுவினர்

மட்டக்களப்பில் பொலிஸாரின் வாகனம் மோதியதில், யுவதிகள் இருவர் படுகாயம்(காணொளி)

Posted by - February 9, 2017

மட்டக்களப்பில் நேற்று  பொலிஸாரின் வாகனம் மோதியதில், யுவதிகள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு நகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு யுவதிகள் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில், பொலிஸ் விடுதிக் கட்டடத்திற்கு முன்பாக இடம்பெற்ற இவ்விபத்தில், எதிரே வந்த இரண்டு யுவதிகள் மீது பொலிஸாரின் வாகனம் மோதியன் காரணமாக, குறித்த யுவதிகள் இருவரும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின்

மட்டக்களப்பில் ஒருங்கிணைந்த சுற்றுலா தொழிற்திறன் அபிவிருத்தி திட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - February 9, 2017

ஒருங்கிணைந்த சுற்றுலா தொழிற்திறன் அபிவிருத்தி திட்ட அலுவலகம் மட்டக்களப்பில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் உல்லாசப்பயணத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்குடனும், வேலைவாய்ப்பற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையிலும், அவுஸ்ரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் ஒருங்கிணைந்த சுற்றுலா தொழிற் திறன் அபிவிருத்தி திட்ட அலுவலகம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு ரொசேரியன் வீதியில் குறித்த அலுவலகம் நேற்று  திறந்துவைக்கப்பட்டது கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அகமட் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி

கிழக்கில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஒத்துழைப்பை

Posted by - February 9, 2017

கிழக்கில் நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணிக்கு, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பூரண ஒத்துழைப்பை வழங்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனிப்பட்ட அரசியல் முரண்பாடுகளுக்குரிய களம் இதுவல்ல என்பதை தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும், தமிழ் பேசும் மக்கள் அனைவரையும் ‘எழுக தமிழ்” பேரணியில் இணைந்து வலுச்சேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் — எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் பொதுமக்களை அறிவூட்டும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கைகள்(காணொளி)

Posted by - February 9, 2017

  எழுக தமிழ் நிகழ்வு தொடர்பில் பொதுமக்களை அறிவூட்டும் துண்டுப்பிரசுரம் வழங்கும் நடவடிக்கைகள் நேற்று மட்டக்களப்பு நகரில் முன்னெடுக்கப்பட்டன. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் குறித்த துண்டுப்பிரசுரம் விநியோகம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிகழ்வில் எழுக தமிழ் இணைத்தலைவர் வசந்தராஜா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம், தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்; தேசிய மக்கள் முன்னணியின்

மேலதிக பாதுகாப்பு செயலாளர் இன்று யாழ் விஜயம்

Posted by - February 9, 2017

இலங்கையின் மேலதிக பாதுகாப்பு செயலாளர் ராஜபக்ஷ இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். மாவட்டத்தின் மீள்குடியேற்ற நிலமைகள் தொடர்பாகவும் காணிகள், வீடுகள் தொடர்பாகவும், மீள்குடியேற்றத்திற்கு பொருத்தமான அரசாங்க காணிகள் தொடர்பாகவும் ஆராய்வதற்காக அவர் அங்கு செல்கிறார். இதற்காக அவர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலர்கள் மற்றும் அரச அதிகாரிகளையும் அவர் சந்திக்கவுள்ளார். இந்த கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதேவேளை இந்த சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின்

போர்க்குற்ற விசாரணைகளை மூடிமறைக்க முயற்சி எடுக்கவில்லை – மங்கள

Posted by - February 9, 2017

போர்க்குற்ற விசாரணைகளை மூடிமறைக்க முயற்சி எடுக்கவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். போர்க்குற்ற விசாரணைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட உள்ளக பொறிமுறைகள் தாமத நிலை காணப்படுகிறது. இதற்கு மேலதிக கால அவகாசம் தேவைப்படுகிறது. இந்த அவகாசத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மாநாட்டில் வைத்து அரசாங்கம் கோரவுள்ளது. இது போர்க்குற்ற விசாரணைகளை மூடிமறைப்பதற்கான முயற்சி இல்லை என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை – த.தே.கூ

Posted by - February 9, 2017

தேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் தெரிவித்துள்ளது. காணி பாரதீனப்படுத்தல் மீதான சட்டமூலத்தின் விவாதம் நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இதனை தெரிவித்தார். ஆகக்கூடிய மதுபானசாலைகள் மட்டக்களப்பிலேயே உள்ளதாக பிரதி அமைச்சர் அமிர் ஹலி சுட்டிக்காட்டினார். தமிழர்களின் வாழ்வியலை உருகுலைத்து, கலாசாரத்தை சிதைத்து, பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதே தேசிய பாதுகாப்பு என அரசாங்கம் கருதுவதானால் நல்லிணக்கம்

சைடம் – ஜே.வி.பி குற்றச்சாட்டு

Posted by - February 9, 2017

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் பயணம் செய்த சிற்றூர்தி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கான பொறுப்பை, சைடம் எதிர்ப்பு குழு மீது சுமத்த முனைவாதாக குற்றம் சுட்டப்பட்டுள்ளது. கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த நிலையில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் உண்மையான விபரத்தை வெளியிட வேண்டும். இல்லை என்றால், அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை தவிர்க்க முடியாது எனவும்

தோட்ட தொழிலாளி ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் பிள்ளைகள்

Posted by - February 9, 2017

டிக்கோயா கிளங்கன் பொது வைத்தியசாலையில் பெண் ஒருவருக்கு ஒரே சூழில் மூன்று குழந்தைகள் சுகப்பிரசவம் நடைபெற்றிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா – சாமிமலை ஸ்டொக்கம் சின்ன சோலங்கந்த பகுதியை சேர்ந்த மோகன் புஸ்பலதா என்ற 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு மூன்று ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர் சீ.யூ.குமாரசிரி பொறுப்பில் நேற்று பகல் 2 மணிக்கு இந்தப் பிரசவம் நிகழ்ந்துள்ளது. டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையின் வரலாற்றில் இவ்வாறான