போர்க்குற்ற விசாரணைகளை மூடிமறைக்க முயற்சி எடுக்கவில்லை என்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்ற விசாரணைகள், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் உள்ளிட்ட உள்ளக பொறிமுறைகள் தாமத நிலை காணப்படுகிறது.
இதற்கு மேலதிக கால அவகாசம் தேவைப்படுகிறது.
இந்த அவகாசத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மாநாட்டில் வைத்து அரசாங்கம் கோரவுள்ளது.
இது போர்க்குற்ற விசாரணைகளை மூடிமறைப்பதற்கான முயற்சி இல்லை என்று அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

