சைடம் – ஜே.வி.பி குற்றச்சாட்டு

349 0

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதான நிறைவேற்று பணிப்பாளர் பயணம் செய்த சிற்றூர்தி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கான பொறுப்பை, சைடம் எதிர்ப்பு குழு மீது சுமத்த முனைவாதாக குற்றம் சுட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் உண்மையான விபரத்தை வெளியிட வேண்டும்.

இல்லை என்றால், அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டை தவிர்க்க முடியாது எனவும் அனுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில், மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிரான போராட்டம் பாரிய அளவில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.