மேலதிக பாதுகாப்பு செயலாளர் இன்று யாழ் விஜயம்

355 0

இலங்கையின் மேலதிக பாதுகாப்பு செயலாளர் ராஜபக்ஷ இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

மாவட்டத்தின் மீள்குடியேற்ற நிலமைகள் தொடர்பாகவும் காணிகள், வீடுகள் தொடர்பாகவும், மீள்குடியேற்றத்திற்கு பொருத்தமான அரசாங்க காணிகள் தொடர்பாகவும் ஆராய்வதற்காக அவர் அங்கு செல்கிறார்.

இதற்காக அவர் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலர்கள் மற்றும் அரச அதிகாரிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.

இந்த கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இதேவேளை இந்த சந்திப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் தலைமையில் போராட்டம் ஒன்று நடைபெறுவதாக இருந்தது.

எனினும் கூட்டத்தில் கலந்துரையாடப்படும் விடயங்களை ஆராய்ந்தப் பின்னரே இந்த போராட்டத்தை நடத்துவதா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படும் என்று சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.