நல்லிணக்கத்திற்காக வடக்கு மக்களும் அர்ப்பணிக்க வேண்டும் – மஹிந்த

Posted by - February 9, 2017

நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப தென் மக்களுடன் வடக்கு மக்களும் அர்ப்பணிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மீகொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது

Posted by - February 9, 2017

பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் ஒருவர் ரத்மலானை பிரேத காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது கொள்ளையடித்துள்ள பல பொருட்கள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 810 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

Posted by - February 9, 2017

நாட்டு மக்கள் அனைவரும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதியமைச்சர் அஜித் பத்மகாந்த பெரேரர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் தற்போது நீர் மின் உற்பத்தியின் அளவு மிகவும் குறைவடைந்து வருவதாகவும், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையே இதற்கான பிரதான காரணம் எனவும் பிரதியமைச்சர் கூறியுள்ளார். இதனால், நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதி அமைச்சர் பிரதியமைச்சர் இவ்வாறு

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த மஹிந்த முயற்சி!

Posted by - February 9, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த பிரயத்தனம் செய்வதாக, அக் கட்சியின் மிரிஹான ஆசன அமைப்பாளர் சங்ஜய சிறிவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

பசுமை பூமி திட்டத்தின் 71 வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன

Posted by - February 9, 2017

பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கும் பசுமை பூமி கிராம அபிவிருத்தி திட்டத்தின் கீழ், அக்கரபத்தணை ஹொல்புரூக் ஊட்டுவில் பெங்கட்டன் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட காணி உரிமையுடனான ஊட்டுவள்ளிபுரம் கிராமம் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களினால் இன்று வியாழக்கிழமை திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது. போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் வசதிகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளுடனான 150 வீட்டுத் தொகுதிகளை கொண்ட ஊட்டுவள்ளி கிராமத்தின் முதற்கட்டமாக 71 வீடுகள் திறந்து வைக்கப்பட்டன. 7 பேர்ச்சஸ் காணியில் 550

இருநூறு வருடகாலமாக வீடற்று அநாதரவாக இருந்த மலையக மக்கள்

Posted by - February 9, 2017

இருநூறு வருடகாலமாக வீடற்று அநாதரவாக இருந்த மலையக மக்கள், சொந்த காணிக்கு உரித்துடையவர்களாகும் பொன்னான நாள் இன்று என மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொது வாக்கெடுப்பு

Posted by - February 9, 2017

புதிய அரசியலமைப்புத் தொடர்பில் பொது வாக்கெடுப்பு நடத்துவதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என, சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

இரணைதீவு கடற்படை முகாமை மூடிவிடக் கூடிய சாத்தியமில்லை-ரணில்

Posted by - February 9, 2017

இரணைதீவு கடற்படை முகாமை மூடிவிடக் கூடிய சாத்தியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இரணை தீவு கடற்படை முகாமை மூடிவிடுமாறு சிறிதரன் கோரியிருந்தமைக்கு அவ்வாறு குறித்த முகாமை மூடிவிட முடியாது என பிரதமர் பதிலளித்துள்ளார். இந்த முகாமை எந்த வகையிலும் மூட முடியாது என கடற்படையினர் தம்மை தெளிவுபடுத்தியுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். தென்

மலையகத்தில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்

Posted by - February 9, 2017

ஹட்டன் – டிக்கோயா கிளங்கன் பொது வைத்தியசாலையில் தோட்டத் தொழிலாளியான பெண் ஒருவர் ஒரே தடவையில் மூன்று குழந்தைகளை பிரசவித்துள்ளார். நுவரெலியா மாவட்டம் மஸ்கெலியா – சாமிமலை ஸ்டொக்கம் சின்ன சோலங்கந்த பகுதியை சேர்ந்த மோகன் புஸ்பலதா என்ற 31 வயதுடைய பெண்ணே இவ்வாறு மூன்று ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் மகப்பேற்று நிபுணர் சீ.யூ.குமாரசிரி பொறுப்பில் நேற்று பகல் 2 மணிக்கு இந்தப் பிரசவம் நிகழ்ந்துள்ளது. கிளங்கன் வைத்தியசாலையின் வரலாற்றில் இவ்வாறான சம்பவம்

கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதிப் பத்திரமின்றியும் நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிய ஐந்து சாரதிகளுக்கு அபராதம்

Posted by - February 9, 2017

கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதிப் பத்திரமின்றியும் நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிய ஐந்து சாரதிகளுக்கெதிராக நான்கு இலட்சத்து இருபதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சிப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய நான்கு நபர்களைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் குறித்த நான்கு சாரதிகளையும் உழவு இயந்திரங்களையும் நேற்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் முன்னிலைப்படுத்தியுள்ளனர். இந்நபர்கள் இதற்கு முன்னரும் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டபோதும் மீளவும் அதே குற்றத்தை செய்தமை உறுதிப்படுத்தப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா