மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

351 0

நாட்டு மக்கள் அனைவரும் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பிரதியமைச்சர் அஜித் பத்மகாந்த பெரேரர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது நீர் மின் உற்பத்தியின் அளவு மிகவும் குறைவடைந்து வருவதாகவும், தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலையே இதற்கான பிரதான காரணம் எனவும் பிரதியமைச்சர் கூறியுள்ளார்.

இதனால், நீர் மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைவடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பிரதி அமைச்சர் பிரதியமைச்சர் இவ்வாறு கேட்டுக்கொண்டார்.

மின்சார நெருக்கடியை தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கையாக 60 மெகாவொட் மின்சலுவை கொள்வனவு செய்யவும், 20 மெகாவொட் மின்வலுவை தேசிய வலைப்பின்னலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பிரதி அமைச்சர் கூறினார்.

இலங்கை மக்கள் நாளொன்றில் 2 ஆயிரத்து 300 மெகாவொட் மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள். நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறையும் பட்சத்தில் தொடர்ச்சியாக 24 மணித்தியாலமும் மின்சாரத்தை விநியோகிப்பது கஷ்டமானது என அமைச்சர் குறிப்பிட்டார்.