கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதிப் பத்திரமின்றியும் நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிய ஐந்து சாரதிகளுக்கு அபராதம்

247 0

கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதிப் பத்திரமின்றியும் நிபந்தனைகளை மீறியும் மணல் ஏற்றிய ஐந்து சாரதிகளுக்கெதிராக நான்கு இலட்சத்து இருபதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சிப்பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மணல் ஏற்றிய நான்கு நபர்களைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் உழவு இயந்திரங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் குறித்த நான்கு சாரதிகளையும் உழவு இயந்திரங்களையும் நேற்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இந்நபர்கள் இதற்கு முன்னரும் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டபோதும் மீளவும் அதே குற்றத்தை செய்தமை உறுதிப்படுத்தப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் இருபது நாட்கள் சமுதாயம் சார் சீர் திருத்த கட்டளைச்சட்டத்தின் கீழ் சமூக சேவையில் ஈடுபடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை அனுமதிப்பத்திரமின்றி மணல் கொண்டு சென்ற மற்றுமொரு உழவு இயந்திரத்திற்கு என்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் மணல் பறிமுதல் செய்யப்பட்டு 14 நாட்கள் சமூக சேவையில் ஈடுபடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அனுமதிப்பத்திரமின்றி மற்றுமொரு உழவு இயந்திரத்தில் மணல் ஏற்றிச் சென்றவருக்கு நாற்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் 14 நாட்கள் சமூக பணியில் ஈடுபடுமாறும் கட்டளையிடப்பட்டுள்ளது.

இவ்வாறு குறித்த ஐந்து பேருக்கும் நான்கு இலட்சத்து இருபதாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.