தமிழர்களுக்கு கிடைப்பதை ஒத்த சமஸ்டி முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்

Posted by - February 12, 2017

தமிழ் மக்களுக்கு கிடைக்கும் சமஸ்டியை ஒத்த சமஸ்டி முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. ஆனால் அவர்களுக்கு என்ன தேவையென்பதை அவர்களே வெளிப்படுத்த வேண்டும் என வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவருமான சி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மொரகஹகந்தை நீர்த்தேக்கத்தைப் பர்வையிட அதிகமானோர் வருகை

Posted by - February 12, 2017

மகாவலி நீர்த்தேக்க செயற்திட்டத்தின் இறுதி நடவடிக்கையான மொரகஹகந்தை களுகங்கை நீர்த்தேக்க செயற் திட்டத்தை பார்வையிட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அதிகமான மக்கள் வருகை தந்த வண்ணமுள்ளதாகவும்,  கடந்த இரு தினங்களில் மாத்திரம் சுமார் 2 லட்சம் பேர் வருகை தந்துள்ளதாகவும் அச்செயற்திட்டத்தின் பொது மக்கள் இணைப்பு அதிகாரி டீ.எம். தயானந்த தெரிவித்துள்ளார். இந்த நீர்த்தேக்கத்தில் 11 கிராமங்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் இன்னும் சு.க தனது நிலைப்பாட்டை கூறவில்லை

Posted by - February 12, 2017

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்னும் தனது நிலைப்பாட்டை தெரியப்படுத்தவில்லை என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சிகிரியாவில் லிப்ட் அமைப்பது குறித்து அவதானம்

Posted by - February 12, 2017

சிகிரியாவை பார்வையிடச் செல்பவர்களுக்கு வசதியாக லிப்ட் மற்றும் எலக்ரிக் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக, அகில விராஜ்காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

கோப்பிளாய் விவகாரம்: கலந்துரையாட வாய்பளிக்குமாறு ரணிலிடம் கோரிக்கை

Posted by - February 12, 2017

முல்லைத்தீவு – கோப்பிளாய் பகுதி காணிகளை அதனது உரிமையாளர்களுக்கு திருப்பியளிப்பது தொடர்பில் கலந்துரையாட வாய்ப்பளிக்குமாறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மு.கா தலைவராக ஹக்கீம்

Posted by - February 12, 2017

இன்றைய தினம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் பேராளர் மாநாடு நடைபெறவுள்ளது. இந்நிலையில் நேற்று விஷேட அதியுயர்பீட கூட்டம் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றது. கடந்த வாரம் கட்சியின் தவிசாளராக இருந்த பசீர் சேகுதாவூதை அப்பதவியிலிருந்து இடை நிறுத்தியதனால், அடுத்த தவிசாளராக யாரை நியமிக்கப்போகின்றார்கள் என்ற பலரது எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதியுயர்பீட கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் கட்சியின் தலைவராக ஏகமனதாக அமைச்சர் ரவுப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டதுடன் ஏனய அனைத்து பதவிகளும் மாற்றம் இன்றி தெரிவு இடம்பெற்றது.

ரணில் நாளை அவுஸ்திரேலியா விஜயம்

Posted by - February 12, 2017

அவுஸ்திரேலிய பிரதமரின் அழைப்பின் பேரில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாளை அவுஸ்திரேலியா செல்லவுள்ளார். எதிர்வரும் 17 ஆம் திகதி வரை பிரதமர் அங்கு தங்கியிருப்பார் என பிரதமர் அலுவலக செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

புதையல் தோண்ட முயன்ற நபர் ஒருவர் கைது

Posted by - February 12, 2017

மஹஒய – ஹரஸ்கல பிரதேசத்தில் புதையல் தோண்ட முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொனராகலை பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் இன்று தெஹித்தகண்டிய நீதாவன் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

எரிபொருள் நிலையம் ஒன்றில் நேற்று இரவு கொள்ளை

Posted by - February 12, 2017

கந்தேகெடிய – மீகஹகிவுல பிதேசத்தில் எரிபொருள் நிலையம் ஒன்றில் 2 பேர் நேற்று இரவு கொள்ளையடித்து சென்றுள்ளனர். இவர்கள் முகத்தை மூடிய நிலையில் வந்துள்ளதுடன், 12 ஆயிரத்துக்கும் அதிகமான பணத் தொகையை கொள்ளையடித்து சென்றுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.

மஹிந்தவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பதாகை உடைப்பு தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு

Posted by - February 12, 2017

முன்னாள் மஹிந்த ராஜபக்ஸவின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பதாகை உடைத்து நீக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரதியமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, வென்னப்புவ பொலிஸாரிடம் நேற்று முறைப்பாடு செய்துள்ளார். வடமேல் மற்றும் மேல்மாகாண சபைகளை இணைக்கும் மகா ஓயா ஊடாக அமைக்கப்படும் பாலம் தொடர்பிலான நிகழ்வினை முன்னிட்டு கொச்சிக்கடை பிரதேசத்தில் வைக்கப்பட்ட பதாதையே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது. எனினும் நேற்றைய தினம் மாகாண சபை உறுப்பினர் இதனை முற்றாக நீக்கிவிட்டு, வேறெரு பகுதியில் வைக்க வேண்டிய பதாகையை