புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்னும் தனது நிலைப்பாட்டை தெரியப்படுத்தவில்லை என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் அனைத்துக் கட்சிகளும் தமது நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் என, அரசியலமைப்பு நிர்ணயக் குழு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்களின் கருத்துப் படி, அவர்கள் புதிய அரசியலமைப்புக்கு அதிருப்தி வௌியிட்டுள்ளதாக, மனோ கணேசன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

