முல்லைத்தீவு – கோப்பிளாய் பகுதி காணிகளை அதனது உரிமையாளர்களுக்கு திருப்பியளிப்பது தொடர்பில் கலந்துரையாட வாய்ப்பளிக்குமாறு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ரணிலிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
எழுத்து மூலம் குறித்த கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கோப்பிளாய் பகுதியில் பிரதேச மக்கள் தமக்கு சொந்தமான காணிகளை மீளப் பெற்றுத் தருமாறு கோரி சுமார் இரு வாரங்களாக போராடி வருகின்றனர்.
இதற்கு ஆதரவளிக்குமாறு கோரி யாழில் மேலும் சில ஆர்ப்பாட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்ட வேளையே ஸ்ரீதரன் மேற்கண்ட விடயத்தை கூறியுள்ளார்.
இதேவேளை, குறித்த காணிகளை மீள வழங்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன இணங்கிய போதும், விமானப் படையினர் அதனை ஏற்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கோப்பிளாய் மக்கள் கோருவது விமானப் படையின் நிலங்களை அல்ல, தாம் பண்நெடுங் காலமாக வசித்து வந்த காணிகளையே எனவும் ஸ்ரீதரன் இதன்போது மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

