போலி நாணயங்களுடன் ஒருவர் கைது

Posted by - February 12, 2017

ஹொரணை, கொடிகம்கொட பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களை அச்சிடும் நிலையத்தில் வைத்து சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதன்போது குறித்த நபரிடமிருந்து 28 இலட்சம் போலி நாணயதாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் அவரை, நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

முச்சக்கர வண்டிகள் தொடர்பான ஒழுங்குமுறை அறிக்கை விரைவில்

Posted by - February 12, 2017

முச்சக்கர வண்டி விதிமுறைகள் தொடர்பிலான இலங்கை தர நிர்ணய பணியக வரையறை பற்றிய அறிக்கையை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள், பெற்றுக் கொடுக்கவுள்ளதாக, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. மேலும், முச்சக்கர வண்டிகளில் பொருத்தப்படும் மீற்றர் எந்த அடிப்படையில் தயாரிக்கப்பட வேண்டும் என, இதன் பின்னர் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும், அதன் தலைவர் சிசிர கோதாகொட கூறியுள்ளார். மக்களுக்கு மிகச் சிறந்த தரமான முச்சக்கர வண்டி சேவைகளை வழங்குவதை நோக்காகக் கொண்டே இந்த வேலைத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக அவர்

கேப்பபிலவு போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு

Posted by - February 12, 2017

பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவு பகலாக கொட்டும் பணியையும் கொளுத்தும் வெயிலையும் பாராது  பதின்மூன்றாவது   நாளாகவும்   போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.  இவர்களுக்கு ஆதரவாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் பொது அமைப்புக்கள் சமூக ஆர்வலர்கள் இளைஞர் அணியினர் பொதுமக்கள் வர்த்தகர்கள் என பலரும் ஆதரவு வழங்கிவருகின்றனர்.

உறுதியுடன் போராடுங்கள் வெற்றி நிச்சயம் கேப்பாபிலவு போராட்டத்துக்கு சம்பூர் மக்கள் ஆதரவு

Posted by - February 12, 2017

பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவு பகலாக கொட்டும் பணியையும் கொளுத்தும் வெயிலையும் பாராது பதின்மூன்றாவது   நாளாகவும்   போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.  அந்தவகையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கேப்பாபிலவிற்கு வருகைதந்த சம்பூர் மக்கள் உறுதியுடன் போராடுங்கள் வெற்றி நிச்சயம் என தெரிவித்துள்ளனர்  தாங்களும் சம்பூரிலே பல காலமாக போராடிய தாம் வெற்றி கண்டுள்ளதாகவும் நம்பிக்கையோடு பூரடுங்கள் வெட்டி கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.  

ஆறாவது நாளாக இடம்பெறும் சிவபூசை

Posted by - February 12, 2017

பிலவுக்குடியிருப்பு பிரதேசத்தில் அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட காணி இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து பிலவுக்குடியிருப்பு மக்கள் இரவுபகலாக பதின்மூன்றாவது நாளாகவும்   போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவளித்தும் கேப்பாபுலவில் உள்ள தன்னுடைய ஆலயம் உள்ளிட்ட பகுதி  விடுவிக்கவேண்டுமேனவும்  கூறி இன்று ஆறாவது நாளாகவும் பூசையில் ஈடுபடுள்ளார்.

கிளிநொச்சி பளை பொலிசாரால் 23 கிலா கேரலா கஞ்சா நேற்றிரவு மீட்பு(காணொளி)

Posted by - February 12, 2017

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிற்கு கிடைத்த தகவலிற்கமைய விசேட மது ஒழிப்பு பொலிசாரால் 34 கிலோ கேரலா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது, நேற்று முந்தினம் பளை வத்திராயன் பகுதியிலிருந்து குருணாகல் நோக்கி கார் ஒன்றில் எடுத்த செல்லப்பட்ட கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின்புாது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், 11 கிலோ கேரலா கஞ்சாவும் மீட்கப்பட்டது, குறித்த சம்பவத்தின்போது ஒரு மோட்டார் கார், 3 மோட்டார் சைக்கிள்கள், மீன்பிடி வள்ளம்

அரசு கேப்பாபுலவு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவா்களின் வாழ்வாதார நிலங்களை விடுவிக்க வேண்டும் -சந்திரகுமாா்

Posted by - February 12, 2017

அரசு கேப்பாபுலவு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவா்களின் வாழ்வாதார நிலங்களை விடுவிக்க வேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் சந்திரகுமாா் கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் உறுதியாக நின்று தங்களின்  தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். மக்கள் அரசியல்வாதிளையும், அதிகாரிகளையும் நம்பியிருந்த நிலைமை மாறி தங்களுடைய பிரச்சினைகளை தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று எழுச்சிக்கொண்டு வரவேற்கதக்கது. இ்ந்த மக்களின் போராட்டம் தமிழ் மக்கள் மத்தியில் நிலத்திற்காகவும், காணாமல் போனவா்கள், அரசியல் கைதிகள் போன்ற தீர்க்கப்படாது உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற மக்களுக்கு

இலங்கையின் மோசடியும், ஜெ கொடுத்த பதிலடியும் – புகழேந்தி தங்கராஜ்

Posted by - February 12, 2017

இலங்கையில் மீண்டும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான மக்கள் கருத்தை அறிய மூத்த வழக்கறிஞர் சகோதரி மனோரி தலைமையில் குழு அமைக்கப்பட்டதற்கு மக்களின் கருத்தைக் காட்டி சர்வதேசத்தின் முகத்தில் கரிபூச வேண்டும் என்பதே பிரதான நோக்கம். நல்லிணக்கத்தைக் குறித்து மீண்டும் மீண்டும் பேசுவதன்மூலம் போர்க்குற்ற விசாரணையை மூடி மறைத்துவிட முடியும் – என்கிற மைத்திரி – ரணில் – சந்திரிகா கோஷ்டியின் நம்பிக்கைதான் அதற்கு அடிப்படை! அந்த மூடநம்பிக்கையைத் தகர்த்து அவர்கள் முகத்தில் கரிபூசியிருக்கிறது மனோரி குழு அறிக்கை.

தமிழர்கள் தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு

Posted by - February 12, 2017

Migration என்பது ஒருவர் தனது சொந்த நாட்டை விட்டு பிறிதொரு நாட்டுக்குச் செல்லுதலாகும். யுத்தத்தின் காரணமாகவோ அல்லது பொருளாதாரப் பிரச்சனை காரணமாகவோ இது நடைபெறலாம். இவ்வாறே பல நாடுகளிலிருந்து பலர் சுவிஸ் நாட்டிற்கு வருவதால், அது சுவிஸ் நாட்டில் பல உள்ளாக்கப்பிரச்னைகளைக் கொண்டுவருகின்றது. சுவிஸ் நாட்டிற்கு வருபவர்களின் சொந்தநாட்டுடன் இணைந்து சுவிஸ் அரசாங்கம் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வினைக் காண விளைகிறது. இதன் அடிப்படையிலே இலங்கையுடன் Migrationsabkommen (அதாவது இடப்பெயர்வு தொடர்பான உடன்படிக்கை ஒன்றில்) சுவிஸ் அரசாங்கம் 04.10.16

அரிசி விற்பனையில் மோசடியா? முறைப்பாடு செய்ய தொடர்பிலக்கம்

Posted by - February 12, 2017

நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலைக்கும் அதிகமாக அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் குறித்து முறைப்பாடு செய்வதற்கு நுகர்வோர் அதிகார சபை உடனடி தொடர்பு இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.