கிளிநொச்சி பளை பொலிசாரால் 23 கிலா கேரலா கஞ்சா நேற்றிரவு மீட்பு(காணொளி)

438 0

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிற்கு கிடைத்த தகவலிற்கமைய விசேட மது ஒழிப்பு பொலிசாரால் 34 கிலோ கேரலா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது, நேற்று முந்தினம் பளை வத்திராயன் பகுதியிலிருந்து குருணாகல் நோக்கி கார் ஒன்றில் எடுத்த செல்லப்பட்ட கஞ்சா பொதியுடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையின்புாது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், 11 கிலோ கேரலா கஞ்சாவும் மீட்கப்பட்டது, குறித்த சம்பவத்தின்போது ஒரு மோட்டார் கார், 3 மோட்டார் சைக்கிள்கள், மீன்பிடி வள்ளம் இரண்டு மற்றும் அதி வலு கொண்ட இஞ்சின் இரண்டும்பொலிசாரால் மீட்கப்பட்டது, சந்தேக நபர்களை 7 நாட்களிற்கு பொலிஸ் விசாரணைக்குட்படுத்தவதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் முலும் 23 கிலா கேரலா கஞ்சாவை நேற்று மீட்டனர்.

இன்றய தினம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்ன, கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் ராயபக்ச உள்ளிட்டவர்கள் மீட்கப்பட்ட பொருட்களை பார்வையிட்டதுடன், நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை பாராட்டியிருந்தமை குறுிப்பிட தக்கதாகும்.

குறித்த நடவடிக்கையில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் வெலிக்கன்ன அவர்களால் நியமிக்கப்பட்ட மது ஒழிப்பு விசேட குழுவுடன்பளை பொலிசாரும்ஈடுபட்டிருந்தனர். கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர், பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் ராயபக்ச உள்ளிட்ட உயரதிகாரிகளின் வழி நடத்தலில் பளை பொலிஸாரால் பல லட்டம் பெறுதியான கேரலா கஞ்சாக்கள் மீட்கப்பட்டமை குறிப்பிட தக்கதாகும்.