அரசு கேப்பாபுலவு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவா்களின் வாழ்வாதார நிலங்களை விடுவிக்க வேண்டும் -சந்திரகுமாா்

274 0

அரசு கேப்பாபுலவு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவா்களின் வாழ்வாதார நிலங்களை விடுவிக்க வேண்டும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் சந்திரகுமாா்

கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்கள் உறுதியாக நின்று தங்களின்  தொடர் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றார்கள். மக்கள் அரசியல்வாதிளையும், அதிகாரிகளையும் நம்பியிருந்த நிலைமை மாறி தங்களுடைய பிரச்சினைகளை தாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று எழுச்சிக்கொண்டு வரவேற்கதக்கது.

இ்ந்த மக்களின் போராட்டம் தமிழ் மக்கள் மத்தியில் நிலத்திற்காகவும், காணாமல் போனவா்கள், அரசியல் கைதிகள் போன்ற தீர்க்கப்படாது உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற மக்களுக்கு ஒரு உந்து சக்தியாக இருக்கும் என நம்புகிறேன்.கேப்பாபுலவு மக்களின் போராட்டத்திற்கு இன்று எவ்வித வேறுபாடுகளும் இன்றி அரசியல் தரப்புக்கள், மத அமைப்புகள், பொது அமைப்புக்கள் என அனைவரும் தங்களுடைய தார்மீக ஆதரவை தெரிவித்து வருகின்றாா்கள். இது இந்த மக்களுக்கு தங்களின் போராட்டத்திற்கு பின்னால் அனைவரும் நிற்கின்றாா்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு  மக்கள்மிகவும் உறுதியாக உள்ளனா். அவா்கள் தங்களின் சொந்த நிலங்களுக்குச் செல்வதனைதவிர வேறு எந்த சமரசத்திற்கும் செல்லத் தயாராக இல்லை.

அரசு இந்த மக்களின் உணா்வுகளை புரிந்துகொண்டு  அவா்களின் பூர்வீக வாழ்விடங்களை விடுவிக்க வேண்டும். படையினர் தற்போதும்  மக்களின் வளமிக்க ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை  ஆக்கிரமித்து வைத்திருப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது. எந்த மக்களும் தங்களின் வளமிக்க வாழ்வாதார நிலத்தை  படையினா் ஆக்கிரமித்திருப்பதனை ஏற்றுக்கொள்ள மாட்டாா்கள். அதனடிப்படையில்தான் கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் போராட்டம் தொடர்கிறது.

தங்களின் உரிமைகளை தாங்களே போராடிப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு அமைவாக கேப்பாபுலவு மக்கள் போராடி வருகின்றாா்கள் அவா்களின் போராட்டம் வெற்றிப்பெற வேண்டும் அதற்கு அனைவரும் முழுமையான  ஆதரவை வழங்கவேண்டும். எனவும் தெரிவித்தாா்