இலங்கை கடற்படை பங்கு கொள்ளும் பன்னாட்டு கடற்படை பயிற்சி பாகிஸ்தானில் ஆரம்பம்

Posted by - February 12, 2017

இலங்கை கடற்படை பங்கு கொள்ளும் பன்னாட்டு கடற்படை பயிற்சி கடந்த 10ஆம் திகதி பாகிஸ்தானில் ஆரம்பமானது. இந்த கடற்படை பயிற்சி 14ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது. இதில் இலங்கை உட்பட 37 நாடுகளின் கடற்படைகள் பங்குபற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுத்தத்தின் வலிகளைச் சுமந்த பெண்களை எழுக தமிழ் புறக்கணித்து விட்டது – அனந்தி குற்றச்சாட்டு

Posted by - February 12, 2017

யுத்தத்தின் ஒட்டுமொத்த வலிகளைச் சுமந்த பெண்களை எழுக தமிழ் புறக்கணித்து விட்டதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் குற்றம் சுமத்தியுள்ளார். அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு எழுக தமிழ் பெண்களைப் பிரதிபலிக்கத் தவறிவிட்டது என அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக நிகழ்வுகளில் கூட தீர்வுத் திட்டம் குறித்துப் முன்மொழியும்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், தேவைகள், தீர்வுகள் குறித்து ஆலோசனைகள் பெறப்படவில்லை. அனைவரும்

754 விற்பனை நிறுவனங்களில் சோதனைகள்

Posted by - February 12, 2017

நுகர்வோர் அதிகார சபை பெப்ரவரி மாதத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 754 விற்பனை நிறுவனங்களில் சோதனைகளை மேற்கொண்டது. இதன்போது 376 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அரிசியை நிர்ணய விலையை விட அதிக விலைகளில் விற்பனை செய்யப்பட்டவர்களும் உள்ளடங்குவதாக நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளர் நாயகமாக மன்சூர் ஏ காதர்

Posted by - February 12, 2017

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் புதிய செயலாளர் நாயகமாக மன்சூர் ஏ காதர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் ஹசன் அலி செயலாளர் நாயகமாக பதவி வகித்து வந்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 27வது பிரதிநிதிகள் மாநாட்டின் இரண்டாவது கூட்டத் தொடர் இன்று கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது கட்சியின் இந்த புதிய நியமனம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலில் பேதம் இருக்க வேண்டுமே தவிர, இன மற்றும் மதவாத அடிப்படையில் பேதம் இருக்கக் கூடாது- ரணில்

Posted by - February 12, 2017

பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளை அரசாங்கம் தீர்க்கின்றதா, இல்லையா என்பது தொடர்பிலேயே அரசியலில் பேதம் இருக்க வேண்டுமே தவிர, இன மற்றும் மதவாத அடிப்படையில் பேதம் இருக்கக் கூடாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் சாரணர் இயக்கத்தின் நூற்றாண்டு பூர்த்தியை முன்னிட்டு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். இனவாதம் மற்றும் மதவாதம் இன்றி, இலங்கையர் என்ற அடையாளத்துடன் முன்னோக்கிச் செல்லும்

பாதையில் சென்றவரைத் தாக்கிய பொலிஸ் அதிகாரி கைது

Posted by - February 12, 2017

வெல்லவாய, திஸ்ஸ வீதியிலுள்ள, சீ.ஜி.எம். மாவத்தையில் வாகனமொன்றில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரை தாக்கினார் என்ற சந்தேகத்தின் பேரில் மொனராகலை பொலிஸ் பிரிவின் ஊழல் தடுப்பு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். தன்னுடைய மோட்டார் சைக்கிளுக்கு பாதையில் இடம் தராமல் சென்றதாக தெரிவித்தே குறித்து பொலிஸ் அதிகாரி தாக்குதல் நடாத்தியதாக வாகனத்தின் சென்ற நபர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். தாக்குதலுக்குட்பட்ட நபர் வெல்லவாய அரச ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அரசாங்கத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது-ரஞ்சித் சொய்சா

Posted by - February 12, 2017

அரசாங்கத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார். இரத்தினபுரி கொலோன்ன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனம் அரச நிறுவனத்தை கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக அரசாங்கம் அமைதியான கொள்கையை கடைப்பிடித்து வருகிறது எனவும் ரஞ்சித் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை இணக்கத்தை வெளியிடவில்லை-சுசில் பிரேமஜயந்த

Posted by - February 12, 2017

புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை இணக்கத்தை வெளியிடவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அரசியலமைப்புத் திருத்தத்திங்கு மாத்திரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடுவலை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இதேவேளை புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் கூறி வருகின்றமை

விடுதலைப் புலிகளை வைத்து சுயலாபம் அடைகின்ற கோமாளிகளின் சுயரூபம்………..

Posted by - February 12, 2017

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பாவித்து தமது சுயநலப்பயணத்தை ஆரம்பித்துள்ளனரே தவிர தமிழினத்தின் விடிவுக்கான எந்த அத்திவாரமும் இடப்படவில்லை என்பதே எனது கருத்தாகும் என தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளை வைத்து சுயலாபம் அடைகின்ற கோமாளிகளின் சுயரூபம் அம்பலமாகியுள்ளதாக குறிபப்பிட்டுள்ளார். மட்டக்களப்பில் நடைபெற்ற எழுக தமிழ் நிகழ்வில் எம்மை மேடையில் ஏற்றவில்லை மாறாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றோர் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பாவித்து தமது சுயநலப்பயணத்தை ஆரம்பித்துள்ளனரே தவிர தமிழினத்தின்

புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் குற்றச்சாட்டு

Posted by - February 12, 2017

புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் பொது ஜனவாக்கெடுப்பொன்றிற்கு செல்வதானது நல்லாட்சி அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிரானது என தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது. முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொகமட் முசாமில் இதனை தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார். நாட்டில் சமஷ்டி முறைமையினை நிறுவுவதற்கு புதிய அரசியல் அமைப்பு சீர்திருத்தம் கொண்டு வரப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.