புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இதுவரை இணக்கத்தை வெளியிடவில்லை என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புத் திருத்தத்திங்கு மாத்திரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடுவலை பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதேவேளை புதிய அரசியலமைப்புச் சட்டம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் கூறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

