அரசாங்கத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்து வருகிறது-ரஞ்சித் சொய்சா

331 0

அரசாங்கத்திற்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்து வருவதாக கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி கொலோன்ன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறிப்பத்திர விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட நிறுவனம் அரச நிறுவனத்தை கொள்வனவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இது தொடர்பாக அரசாங்கம் அமைதியான கொள்கையை கடைப்பிடித்து வருகிறது எனவும் ரஞ்சித் சொய்சா குறிப்பிட்டுள்ளார்.