நுகர்வோர் அதிகார சபை பெப்ரவரி மாதத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 754 விற்பனை நிறுவனங்களில் சோதனைகளை மேற்கொண்டது.
இதன்போது 376 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அரிசியை நிர்ணய விலையை விட அதிக விலைகளில் விற்பனை செய்யப்பட்டவர்களும் உள்ளடங்குவதாக நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

