தமிழ்நாட்டில் உடனடியாக சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு இல்லை: ராமதாஸ்

Posted by - February 13, 2017

தமிழ்நாட்டில் உடனடியாக சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பு இல்லை என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேட்டி அளித்தார்.

தமிழக அரசியல் நெருக்கடி – அரசியல் சட்டப்படி தீர்வு காண வேண்டும்- நிதிஷ் குமார்

Posted by - February 13, 2017

தமிழக அரசியல் நிலவரம் குறித்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் நேற்று செய்தியாளர்களிடம் தமிழக முதல்-அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வம் கட்டாயம் காரணமாக ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்து உள்ளார். அதே சமயம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா முதல்-அமைச்சராக வேண்டி பதவி ஏற்க தீவிரம் காட்டி வருகிறார். இதனால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இது அக்கட்சியின் உள் விவகாரம். அவர்களிடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு குறித்து விமர்சனம் செய்வது எனக்கு ஏற்புடையதாக இல்லை. இந்த பிரச்சினைக்கு அரசியல்

உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் முடக்கம் – அதிகாரிகள் விசாரணை

Posted by - February 13, 2017

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைதள பக்கம் மர்ம நபர்கள் சிலரால் நேற்று காலை திடீரென்று முடக்கப்பட்டது. உள்துறை அமைச்சகத்தின் முக்கிய அறிக்கைகளும், தகவல்களும் வெளியாகும் இணையதள பக்கம் முடக்கப்பட்டது தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்ட அச்சுறுத்தலாக கருதப்படுகிறது. இணைதள பக்கம் முடக்கப்பட்டது குறித்து தேசிய தகவலியல் மையத்தின் கம்ப்யூட்டர் குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் மத்திய, மாநில அரசுகளின் 700 இணையதள பக்கங்கள்

ஈராக் நாட்டில் குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரோடு எரித்து கொலை

Posted by - February 13, 2017

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். இயக்கத்தினரை ஒடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க கூட்டுப்படைகள், உள்நாட்டுப் படைகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் அவர்களை முழுமையாக ஒடுக்க முடியவில்லை. இன்னும் பல நகரங்கள் அவர்களது கட்டுப்பாட்டின்கீழ்தான் உள்ளன. கிர்குக் நகரில் இருந்து 55 கி.மீ. தென்மேற்கில் அமைந்துள்ள அல் ஷஜரா கிராமமும் அவர்களது கட்டுப்பாட்டின்கீழ்தான் உள்ளது. இந்த நிலையில் அங்கிருந்து குடிமக்கள் சிலர் தப்பி கிர்குக், சலாகுதீன் போன்ற இடங்களுக்கு நேற்று முன்தினம் ஓட்டம் எடுத்தனர். ஆனால் அவர்களில்

டிரம்பை பார்த்து திருந்துங்கள் – மோடிக்கு ப.சிதம்பரம் அறிவுரை

Posted by - February 13, 2017

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இதில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய பிரதமர் மோடி முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை விமர்சித்தார். காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நிகழ்ந்த பிறகும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாததை சுட்டிக்காட்டிய அவர், ‘ரெயின்கோட் அணிந்து குளிக்கும் கலை மன்மோகனுக்கு தெரிந்துள்ளது’ என்று கூறினார். இந்நிலையில், மன்மோகன் சிங் குறித்த பிரதமர் மோடியின்

கனிமொழி எம்.பி., வெளிநாடு செல்ல அனுமதி

Posted by - February 13, 2017

‘2 ஜி ஸ்பெக்ட்ரம்’ வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கனிமொழி எம்.பி., வெளிநாடு செல்ல அனுமதி வழங்கி டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது. நாடு முழுவதும் பெரும்பரபரப்பை ஏற்படுத்திய ‘2 ஜி ஸ்பெக்ட்ரம்’ ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவர், தி.மு.க. எம்.பி., கனிமொழி. இந்த வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை டெல்லி சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இந்தநிலையில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி ஆப்பிரிக்க நாடுகளான ருவாண்டாவுக்கும், உகாண்டாவுக்கும் 19-ந் தேதி முதல்

நானாட்டானில் விபத்து – 3 பேர் காயம்

Posted by - February 13, 2017

மன்னார் – நானாட்டான் பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மூன்று பேர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நானாட்டானில் இருந்து மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன், பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இளைஞர்கள் இருவரும் முச்சக்கர வண்டியின் சாரதியும் காயமடைந்துள்ளனர். காயமடைந்த 3 பேரும் மன்னார் பொது வைத்தியசாலையில்

ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது – வடகொரியா

Posted by - February 13, 2017

வடகொரியாவினால் ஏவுகணை ஒன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக வடகொரிய தலைவர் கிம் ஜொங் வுன் தெரிவித்துள்ளார். கொரிய அரச ஊடகத்தை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. தொலைதூரம் சென்று தாக்கக் கூடிய ஏவுகணை ஒன்றே இவ்வாறு நேற்று சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையானது புதிய வகை முயற்சியாக அமைந்துள்ளதாக வடகொரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. அணு ஆயுத உற்பத்தி, ஏவுகணை பரிசோதனை என்பவற்றிற்கு எதிராக சர்வதேசம், வடகொரியா மீது பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வரும் நிலையில்

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஆரம்பம் 2020இல் – டிலான் பெரேரா

Posted by - February 13, 2017

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான ஆரம்பம் 2020இல் தொடக்கிவைக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஹாலியெல பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்சியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை வெளியேறுமாறு வலியுறுத்துவதாக தெரிவித்த டிலான் பெரேரா எவ்வாறெனினும் 2017ஆம் ஆண்டில் ஆட்சியை கவிழ்க்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

பசியால இளைஞர் கொலை – மேலும் 6 பேர் கைது

Posted by - February 13, 2017

பசியால பிரதேசத்தில் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கொலைசெய்யப்பட்டு வரக்காபொல எதினாவெல பிரதேசத்தில் வீசி எறியப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஆறு பேர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் நேற்று முன்தினம் ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் நான்கு பேர் கொலையுடன் தொடர்பில்லாதவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பசியால பிரதேசத்தில் தொழில்புரிந்துவந்த 32 வயது இளைஞர் ஒருவர் எதினாவெல பிரதேசத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை உடலமாக மீட்கப்பட்டார். பசியால பிரதேசத்தில் இருந்து தமது சொந்த ஊரான கட்டுகஸ்தோட்டைக்கு