டிரம்பை பார்த்து திருந்துங்கள் – மோடிக்கு ப.சிதம்பரம் அறிவுரை

249 0

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதலாவது அமர்வு நடைபெற்று முடிந்துள்ளது.

இதில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய பிரதமர் மோடி முன்னாள் பிரதமர்களான இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை விமர்சித்தார்.

காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நிகழ்ந்த பிறகும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லாததை சுட்டிக்காட்டிய அவர், ‘ரெயின்கோட் அணிந்து குளிக்கும் கலை மன்மோகனுக்கு தெரிந்துள்ளது’ என்று கூறினார்.

இந்நிலையில், மன்மோகன் சிங் குறித்த பிரதமர் மோடியின் விமர்சனத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், ”அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது தனக்கு பல தனிப்பட்ட முரண்பாடுகள் இருந்தாலும் கூட அவர் தமது முதலாவது உரையில் முன்னாள் அதிபர் ஒபாமாவை பாராட்டினார்” என்று குறிப்பிட்டார்.