நானாட்டானில் விபத்து – 3 பேர் காயம்

261 0

மன்னார் – நானாட்டான் பிரதான வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த மூன்று பேர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நானாட்டானில் இருந்து மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியுடன், பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இளைஞர்கள் இருவரும் முச்சக்கர வண்டியின் சாரதியும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த 3 பேரும் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரனைகனை மன்னார் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.