பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் – டென்மார்க் கார்த்திகை 23.11.2017
இன்று நாங்கள் தம் உயிர் தந்து எம் உயிர் காத்த மாவீரர் வாரத்தில் பயணிக்கின்றோம். மாவீரர்கள் மகத்தானவர்கள். மரியாதைக்கு உரியவர்கள். தரணி வாழ் தமிழர் உரிமைக்காக தமிழீழ நாட்டிலே தம் உயிரை ஈந்தவர்கள் . ஸ்ரீலங்காவின் சிங்கள பேரினவாத அரசின், தமிழீழ மக்களுக்கெதிரான நீதிக்கு மீறிய இனவழிப்பு அடக்குமுறைக்கெதிராக, விடுதலை வேண்டி போராடி களத்தில் மடிந்த புனிதர்கள். வழமை போன்று இம்முறையும் Århus பல்கலைக்கழகத்தில், டென்மார்க் நாட்டின் மாவீரர் நாள் ஒழுங்கமைப்பு குழுவின் ஆதரவுடன், தமிழ் இளையோர்

