பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியம் – டென்மார்க் கார்த்திகை 23.11.2017

456 0

இன்று நாங்கள் தம் உயிர் தந்து எம் உயிர் காத்த மாவீரர் வாரத்தில் பயணிக்கின்றோம்.

மாவீரர்கள் மகத்தானவர்கள். மரியாதைக்கு உரியவர்கள். தரணி வாழ் தமிழர் உரிமைக்காக தமிழீழ நாட்டிலே தம் உயிரை ஈந்தவர்கள் . ஸ்ரீலங்காவின் சிங்கள பேரினவாத அரசின், தமிழீழ மக்களுக்கெதிரான நீதிக்கு மீறிய இனவழிப்பு அடக்குமுறைக்கெதிராக, விடுதலை வேண்டி போராடி களத்தில் மடிந்த புனிதர்கள்.

வழமை போன்று இம்முறையும் Århus பல்கலைக்கழகத்தில், டென்மார்க் நாட்டின் மாவீரர் நாள் ஒழுங்கமைப்பு குழுவின் ஆதரவுடன், தமிழ் இளையோர் நாங்கள் இங்கு மாவீரர் நினைவேந்தி நிற்க்கின்றோம்.

‘எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றானர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்.;’

என்ற எம் தேசியத் தலைவரின் எண்ணத்திற்கேற்ப, எம்முடன் சேர்ந்தியங்கும் பலதேசிய, பல்துறை சார்பு மாணவருக்கும் எமது போராட்த்தின் அறவிளக்கத்தை புரிந்துணர்வாக்கி , இலட்சிய நெருப்பை இதயத்தில் இருத்தி, தமிழ் இளையோர் நாங்கள் நம் இருப்பை உறுதி செய்வோம், என்று இந்த மாவீரர் நாள் நினைவேந்தல் நாளில் உறுதி ஏற்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

நன்றி.

தமிழ் மாணவர் ஒன்றியம்.
Århus பல்கலைக்கழகம் ,
டென்மார்க்.

Leave a comment