இந்த அரசாங்கத்தை அசைக்க முடியாது.!

Posted by - November 29, 2017

பல தரப்பினரும் இந்த அரசாங்கம் இன்று அல்லது நாளை கலைந்து விடும் என்ற பகல் கனவுடன் இருக்கின்றார்கள். ஆனால் நான் அவர்களிடம் கூறுகின்றேன். தயவு செய்து அந்த பகல் கனவு காண்பதை விட்டு விட்டு எங்களுடன் இணைந்து இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு முன்வாருங்கள்.இந்த அரசாங்கம் இன்னும் 3 வருடங்களுக்கு தொடர்ந்து செல்லும் என கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் உப தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். வேற்றுமையில்

கட்சிப் பதவியையும் உறுப்புரிமையையும் பறித்து விட்டனர் – பியசிறி குற்றச்சாட்டு

Posted by - November 29, 2017

தான் தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்தும் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக, பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார். 

தென் கொரியா – இலங்கைக்கு இடையில் 5 ஒப்பந்தங்கள்

Posted by - November 29, 2017

தென் கொரியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்த நாட்டு ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 

CID யிற்கு தகவல் வழங்குமாறு கடற்படை தளபதிக்கு உத்தரவு

Posted by - November 29, 2017

லெப்டினன்ட் கேர்ணல் பிரசாத் ஹெட்டியாராச்சியின் கீழ் சேவையாற்றிய அதிகாரிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு தகவல் வழங்குமாறு கடற்படைத்தளபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் செய்தமை தொடர்பிலான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் நீதவான் லங்கா ஜயரத்ன மூலம் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கொமாண்டர் டீ.கே.பி.தசநாயக உள்ளிட்ட 7 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நிலையில் வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம்

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இல்லையாயின் 5ம் திகதிக்கு முன் அறிவிக்கவும்!

Posted by - November 29, 2017

இம்முறை வாக்காளர் பட்டியலில் தமது பெயர் இல்லையாயின் அல்லது தகுதியற்ற ஒருவரின் பெயர் உள்ளடக்கப்பட்டிருப்பின், டிசம்பர் 5ம் திகதிக்கு முன்னர் தெரியப்படுத்துமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. 

இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு 50 மேலதிக அதிகாரிகள்

Posted by - November 29, 2017

இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழுவுக்கு மேலதிகமாக 50 அதிகாரிகளை இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க வினவிய கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே சபாநாயகர் கருஜயசூரிய இதனை குறிப்பிட்டார். அரசியல் பேரவையின் அனுமதியின் அடிப்படையில் இதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் வடக்கு முதலமைச்சருடன் சந்திப்பு

Posted by - November 29, 2017

வடக்கின் நிலமைகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு அவுஸ்ரேலியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் பீரின் கஸ்ரன் அடங்கிய குழுவினர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

பெற்றோலில் மண்ணென்ணெய்: எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சீல்

Posted by - November 29, 2017

பெற்றோலில் மண்ணென்ணெய் கலந்து விற்றதாக கூறப்படும், நாஉன பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்திற்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையம் சீல் வைக்கப்பட்டுள்ளது. 

அரசாங்கத்தை வலியுறுத்தி சத்தியாகிரக போராட்டம்!

Posted by - November 29, 2017

கினிகத்தேனை பொல்பிட்டிய புரோட்லேன்ட் நீர் மின் உற்பத்தி நிலையத்தின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக இப்பிரதேசத்தை சேர்ந்த 34 குடும்பத்தினர் கூடாரங்களை அமைத்து இரண்டாவது நாளாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

மெழுகுவர்த்தி வைத்து பரீட்சை எழுதிய மாணவர்கள்!- மட்டக்களப்பில்

Posted by - November 29, 2017

பாடசாலை வகுப்பறைகளில் இருள் சூழ்ந்துள்ளதால் பரீட்சையெழுதும் மாணவர்கள் மெழுகுவர்த்தியை வைத்து பரீட்சையெழுதிய சம்பம் இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றது. இந்நிலையில் மாணவர்களுக்கான மூன்றாம் தவணைப்பரீட்சை நடைபெற்று வருகின்றது. காலைநேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுவதினால் வகுப்பறைகள் இருளடைந்து காட்சியளிக்கின்றன. பல பாடசாலைகளில் மாணவர்கள் மெழுகுவர்த்தி வெளிச்சத்திலேயே பரீட்சை எழுதிவருகின்றமையை அவதானிக்க முடிந்தது. மட்டக்களப்பு, குருமண்வெளி சிவசக்தி வித்தியாலய மாணவர்கள் இவ்வாறு மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பரீட்சை எழுதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.