தான் தேசிய சுதந்திர முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்தும் கட்சி உறுப்புரிமையில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளதாக, பியசிறி விஜேநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், இது ஏற்க முடியாததொன்று எனக் கூறிய அவர், இந்த விடயம் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையிட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கட்சியின் ஒழுக்க விதிகளை மீறியமை தொடர்பிலேயே, பியசிறி விஜேநாயக்கவின் கட்சி உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உரிய முறைக்கு அமையவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பியசிறி தன் தரப்பிலுள்ள விடயங்களை தெரிவிக்க வேண்டுமாயின், கட்சியின் ஒழுக்காற்றுக் குழுவிற்கு வந்து அதனைச் செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

