லெப்டினன்ட் கேர்ணல் பிரசாத் ஹெட்டியாராச்சியின் கீழ் சேவையாற்றிய அதிகாரிகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு தகவல் வழங்குமாறு கடற்படைத்தளபதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பில் 11 இளைஞர்களை கடத்தி காணாமல் செய்தமை தொடர்பிலான வழக்கு இன்று கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் நீதவான் லங்கா ஜயரத்ன மூலம் இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கொமாண்டர் டீ.கே.பி.தசநாயக உள்ளிட்ட 7 பேரும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நிலையில் வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

