தேர்தல் பெப்ரவரியில் !

Posted by - December 1, 2017

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் எஞ்சிய 208 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவித்தல் எதிர்வரும் 4 ஆம் வெளியிடப்படவுள்ள நிலையில், அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கும் ஒரே தினத்தில் தேர்தலை நடத்த முடியும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இதன்படி, உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாத ஆரம்பத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. தற்போதுவரை 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான வேட்புமனு கோரலுக்கான அறிவிப்பு

போக்குவரத்து தடையை சீர்செய்ய விசேட ஏற்பாடு

Posted by - December 1, 2017

கொழும்பு மாநகர சபை எல்லைப்பகுதிக்குள் மரங்கள் முறிந்து வீழந்து போக்குவரத்துக்கு தடையேற்பட்டிருந்தால் அதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுவதற்கான ஏற்பாடுகளை மாநகர சபை மேற்கொண்டுள்ளது. சீரற்ற காலநிலையையடுத்து கொழும்பின் பல பாகங்களிலும் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் தமது அவசர அழைப்புக்கு அழைப்பை மேற்கொண்டு தெரிவிக்குமாறு கொழும்பு மாநகர சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக 0777 313247 மற்றும் 110 என்ற தொலைபேசி இலக்கங்களை கொழும்பு மாநாகர சபை பொதுமக்களின் நன்மைகருதி வெளியிட்டுள்ளது.

நில்வலா, கிங் மற்றும் களு கங்கைகளில் நீர் மட்டம் அதிகரிப்பு

Posted by - December 1, 2017

நில்வலா, கிங் மற்றும் களு கங்கைகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. சீரற்றக் காலநிலையின் காரணமாக 13 மாவட்டங்களில் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும், குறித்த மாவட்டங்களில் 20000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள போதும், 1000 பேர் வரையிலேயே பாதுகாப்பான முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீரற்றக் காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களால் இதுவரையில் 7 பேர் மரணித்துள்ளனர். நாடு முழுவதும் மொத்தமாக 4 ஆயிரத்து 886 குடும்பங்களைச் சேர்ந்த

வலி. வடக்கில் 29 ஏக்கர் காணி 30 ஆண்டுகளின் பின் விடுவிப்பு

Posted by - December 1, 2017

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு ஒட்டகப் புலத்தில் இராணுவத்தினர் வசமிருந்த 29 ஏக்கர் காணி நேற்று (30) யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது. வலிகாமம் வடக்கு வல்லை-தெல்லிப்பழை-அராலி வீதியில் வசாவிளானுக்கும், அச்சுவேலிக்கும் இடைப்பட்ட பகுதியான வசாவிளான் உத்தரமாதா தேவாலயம் மற்றும் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றின் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்பட்டன.

OCKHI சூறாவளி கொழும்பில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவிற்கு நகர்வு

Posted by - December 1, 2017

அரேபிய கடலிலுள்ள ஒக்கிய OCKHI சூறாவளி தற்போது கொழும்பில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டு, , நாட்டிற்கு எதிர்த்திசையில் நகர்ந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக அச்சுறுத்தி வந்த இந்த சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறைந்து விடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனினும், நாட்டின் பல பாகங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம் என திணைக்களம் இன்று காலை விடுத்த அறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, ஊவா,

பொதுமக்களே! அவதானமாக இருங்கள்! அனர்த்த முகாமைத்துவ மையம்

Posted by - December 1, 2017

நில்வலா, கிங் மற்றும் களு கங்கைகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவித்துள்ளது.

சனநாயக போர்முறை வெளிகளை தமிழ்ப் புத்திஜீவிகளும் மக்கள்நல தொண்டர்களும் மிகை நிரப்ப வேண்டும் – தயாமோகன்

Posted by - December 1, 2017

யேர்மனியில் மாவீரர்நாள் உரையில் தயாமோகன். உலகப் போரியல் ஒழுக்க மாற்றம், உலக அரசியல் நகர்வு, உலகப் பொருளாதார நகர்வு போன்றவை கணக்கில் எடுக்கப்பட்டு, எமது விடுதலைப் போராட்டத்தின் ஆயுத வழிமுறைப் போர் திட்டமிட்டு நசுக்கப்பட்டது. ஆனால் இன்று எம்முன்னே பல சனநாயக போராட்ட வெளிகள் விரிந்து கிடக்கின்றது. இப்போர்முறை வெளிகளை தமிழ்ப் புத்திஜீவிகளும், மக்கள் நலத் தொண்டர்களும் மிகை நிரப்ப வேண்டும். யேர்மனியில் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நினைவெழுச்சி நாள் நிகழ்வில் கலந்துகொண்ட, தமிழீழ விடுதலைப்

ஒளியில் மிதந்தது தமிழீழக் கனவு!

Posted by - November 30, 2017

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின்னர் இவ்வருட மாவீரர் நாள் (2017) என்றும் இல்லாதவாறு தாயகம் எங்கும் ஒளி தீபங்கள் வான் நோக்கி ஒளிர்ந்தன.

இலங்கை அணியின் புதிய தலைவர் திசர பெரேரா!

Posted by - November 30, 2017

இரு­வகை மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட ஓவர் கள் கிரிக்கெட் போட்­டி­களில் இலங்கை அணியின் தலை­வ­ராக சக­ல­துறை வீரர் திசர பெரேரா நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.