மியான்மர் நாட்டில் ரோஹிங்யா என்ற வார்த்தையை பயன்படுத்தாதது ஏன்? போப் ஆண்டவர் பிரான்சிஸ்

Posted by - December 4, 2017

மியான்மர் நாட்டில் ரோஹிங்யா என்ற வார்த்தையை பயன்படுத்தாதது ஏன் என்பது குறித்து போப் ஆண்டவர் பிரான்சிஸ் தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலமே பெண் சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தமுடியும்! மகளிர் விவகார அமைச்சர் அனந்திசசிதரன்!

Posted by - December 3, 2017

கொள்கை அடிப்படையில் பெண்கள் அரசியலுக்கு வருவதன் மூலமே பெண் சமூகத்தின் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த முடியும் என்று யாழ் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் நடைபெற்ற பெற்றோர் தின விழாவில் பிரதம விருந்தினராக பங்கேற்று உரையாற்றும் போது வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் கல்விச் செயற்பாட்டிற்கு உறுதுணையாகச் செயற்பட்டுவரும் பெற்றோர்களுக்கு நினைவுப் பரிசில்களை வழங்கி கௌரவித்ததைத் தொடர்ந்து அமைச்சர் அங்கு பேசுகையில்… பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் அரசியல் சார்பற்று நடுநிலையானச மூகக்கட்டமைப்பினை

யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

Posted by - December 3, 2017

அரலகங்வில தேவகல பிரதேசத்தில் யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த யுவதி தனது வீட்டின் அறை ஒன்றில் இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சடலம் அரலங்வில மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலைக்கான காரணம் இதுவரையில் அறியப்படவில்லை. பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ள நிலையில் அரலங்வில காவற்துறை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

புதையல் தோண்டிய 5 பேர் கைது!

Posted by - December 3, 2017

ஒட்டுசுடான் – வசமேமுன்னியன்கட்ட வன பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 5 பேர் காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைதீவு பிரதேச ஊழல் எதிர்ப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய நேற்று இரவு குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இதன்போது அவர்கள் பயன்படுத்திய உபகரணங்கள் காவற்துறையினால் கைப்பற்றப்பட்டுள்ளது

வீடு ஒன்றில் தீப்பரவல்! 5 பேர் காயம்

Posted by - December 3, 2017

பொல்கஹவெல – பனலிய பிரதேசத்தில் வீடு ஒன்றில் நேற்று இரவு தீ பரவியதில் வீட்டில் இருந்து 5 பேர் தீக் காயங்களுக்கு உட்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பொல்கஹவெல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் மருத்துவமனையிற்கு மாற்றப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் இரு பெண்கள், ஆண் குழந்தை மற்றும் பெண் குழந்தை ஒன்றும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நுளம்புகளால் உருவாகும் நோய்க்கான ஊசி மருந்து தடை

Posted by - December 3, 2017

நுளம்புகளால் உருவாகும் ஒரு வகை டெங்கு நோய்க்கு எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முதலாவது ஊசி மருந்துக்கு பிலிப்பைன்ஸ் தடைவிதித்துள்ளது. நேற்று முதல் பிலிப்பைன்ஸ் இந்த தடையை விதித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த ஊசி மருந்தின் மூலம் ஏற்படக்கூடிய எதிர்விளைவுகள் குறித்து பிரபல ஆய்வு நிறுவனம் எச்சரித்ததை தொடர்ந்து இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதற் தடவையாக டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர் ஒருவருக்கு குறித்த ஊசி மருந்தை ஏற்றுவதன் மூலம் நோயாளரின் நிலை மேலும்

நாட்டிற்கு புதிய அரசியல் அமைப்பொன்று அத்தியவசியம்

Posted by - December 3, 2017

நாட்டிற்கு புதிய அரசியல் அமைப்பொன்று அத்தியவசியம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.  கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு புதிய அரசாங்கத்தை ஆரம்பிற்பதற்கு முன்னர், புதிய அரசியல் அமைப்பின் தேவைப்பாடு குறித்து பல கருத்துக்களை முன்வைத்தனர். இதற்கமையவே, புதிய அரசாங்கம் ஒன்றை மக்கள் உருவாக்கினர். எனவே, நாட்டில் வாழும் அனைவரிது உரிமைகளும் பாதுகாப்பதற்கு புதிய அரசியல் அமைப்பு அத்தியவசியம் என சந்திரிக்கா

போயா தினத்தில் சாராயம் விற்றதாக ஒருவர் கைது!

Posted by - December 3, 2017

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் போயா தினமான இன்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். குருநகரைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 40 போத்தல்கள் மதுபானம் மற்றும் 43 பியர் ரின்கள் மீட்கப்பட்டன. யாழ்ப்பாணம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் எனப் பொலிஸார் மேலும் கூறினர்.

பிரச்சார பணிகளுக்கு சமயத் தளங்கள் பயன்படுத்தப்படக் கூடாது

Posted by - December 3, 2017

எதிர்வரும் உள்ளுராட்சிமன்ற தேர்தலில் பிரச்சார பணிகளுக்கு சமயத் தளங்கள் பயன்படுத்தப்படக் கூடாதென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அனைத்து கட்சிகளினதும் செயலாளர்களுக்கு இது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம் மொகமட் குறிப்பிட்டுள்ளார். 2002 1ஆம் இலக்க சட்டத் திருத்தத்தின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய எதிர்வரும் தேர்தல் காலத்தில் சமய நிறுவனங்களை பயன்படுத்தி பிரச்சாரங்களை மேற்கொள்வதும், அழுத்தங்களை ஏற்படுத்துவதும் முற்று முழுதாக தடைசெய்யப்படுவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

​முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கள்ளநோட்டுக்களை கொடுத்து வர்த்தகர்களை ஏமாற்றிய நபர்கள்

Posted by - December 3, 2017

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு சந்தைப்பகுதியில் இனம்தெரியாத நபர்கள்  கள்ளநோட்டுக்களை கொடுத்து பொருட்களை வாங்கி வர்த்தகர்களை ஏமாற்றிவிட்டு  தப்பிச்சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தும்  எந்த நடவடிக்கையும் இல்லை என வர்த்தகர்கள்  குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு சந்தைப்பகுதியில் இன்றைய தினம் இனம்தெரியாத நபர்கள் ஒரே இலக்கமுடைய ()ஆயிரம் ரூபா தாள்களை கொடுத்து  வர்த்தக நிலையங்களில் பொருட்களை வாங்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு சுமார் 6 0 0 0 ரூபா