யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் போயா தினமான இன்று சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டார் என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.குருநகரைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 40 போத்தல்கள் மதுபானம் மற்றும் 43 பியர் ரின்கள் மீட்கப்பட்டன.
யாழ்ப்பாணம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார் எனப் பொலிஸார் மேலும் கூறினர்.

