உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப் பங்கீடு தொடர்பில் மூன்றாம் கட்டப் பேச்சு!

Posted by - December 5, 2017

உள்ளூராட்சித் தேர்தலில் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையேயான மூன்றாவது சுற்றுப்பேச்சு இன்று மாலை ஆரம்பமாகியுள்ளது. 

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் “தாவரவியல் பூங்கா” என நாட்டப்பட்ட பெயர்பலகை பிடிங்கி எறியப்பட்டது!

Posted by - December 5, 2017

கிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் உத்தரவுக்கு அமையவே கரைச்சிப் பிரதேச சபையினால் தாரவியல் பூங்கா எனும் பெயர்ப்பலகை அங்கு நாட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கே.பி.வெளிநாடு செல்ல நீதிமன்றம்  அனுமதி

Posted by - December 5, 2017

கே.பி.  என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வௌிநாடு செல்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்  அனுமதி வழங்கியுள்ளது. குமரன் பத்மநாதனுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தாக்கல் செய்திருந்த மனுவை நிராகரித்து நீதிமன்றம் நேற்று  இந்த அனுமதியை வழங்கியுள்ளது. பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கே.பி.யை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்தாணை கட்டளை பிறப்பிக்கக் கோரி விஜித ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். எவ்வாறாயினும்இ விசாரணை நடத்தும் அளவிற்கு சட்ட அடிப்படை இல்லையெனத்

அமெரிக்கா, தென்கொரிய விமானப் படை போர் பயிற்சி

Posted by - December 5, 2017

ஐ.நா. சபையின் எச்சரிக்கையை மீறி வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து வடகொரியாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் முப்படைகளும் இணைந்து தனித்தனியாக போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வரிசையில் இருநாட்டு விமானப் படைகளும் நேற்று போர்ப் பயிற்சியை தொடங்கின. ஒரு வாரம் நடைபெறும் இந்த பயிற்சியில் இருநாடுகளையும் சேர்ந்த ஏராளமான போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன. இதனிடையே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர் நிருபர்களிடம் கூறியபோது,

திமுகவுடன் கூட்டணியில் இருக்கும்போது விஷாலுக்கு வாழ்த்து சொல்வதா?- குஷ்புவுக்கு கராத்தே தியாகராஜன் கண்டனம்

Posted by - December 5, 2017

திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கும் போது விஷாலுக்கு ஆதரவு தெரிவிப்பது ஏன் என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்புவுக்கு கராத்தே தியாகராஜன்  கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாக போட்டியிடுகிறார், அவருக்கு காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர் குஷ்பு வாழ்த்து சொன்னார். இதற்கு எதிர்ப்புதெரிவித்துள்ள தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சித்தலைவர் கராத்தே தியாகராஜன், ”திமுகவுடன் கூட்டணி அமைத்து வேட்பாளரும் பிரச்சாரத்தை தொடங்கி உள்ள நிலையில் விஷாலுக்கு வாழ்த்து சொல்வது சரியா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொண்டு இந்திய கலாச்சாரத்தை ஆவணப்படுத்தும் இங்கிலாந்து இளைஞர்

Posted by - December 5, 2017

இந்தியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த கலாச்சாரம், பண்பாடு, மக்களின் வாழ்க்கை முறைகள், இயற்கை அழகு உள்ளிட்டவற்றை ஆவணப்படுத்தும் வகையில் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் இங்கிலாந்து இளைஞர் ஒலீ ஹன்டர் ஸ்மார்ட் (34) நடைபயணம் மேற்கொண்டுள்ளார். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றையும், சுலோச்சனா முதலியார் பாலத்தையும் நேற்று அவர் விடியோ காட்சிகளாக பதிவு செய்தார். இங்கிலாந்தில் லண்டன் நகரை சேர்ந்தவர் ஹன்டர் ஸ்மார்ட். மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டுவந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியிலிருந்து

திருப்பி விடப்பட்ட பேருந்துகள், இறக்கிவிடப்பட்ட பள்ளிக் குழந்தைகள்: அண்ணாசாலையில் மதியம் வரை தீராத போக்குவரத்து நெரிசல்

Posted by - December 5, 2017

சென்னையில் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி இன்று முதல்வர், அமைச்சர்கள் நடத்திய பேரணி, டிடிவி தினகரன் அணியினர் நடத்திய பேரணி காரணமாக சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்துகள் திருப்பி விடப்பட்டதால் பள்ளிக் குழந்தைகள் சாலையில் இறக்கிவிடப்பட்டு நடந்தே பள்ளிக்கு சென்றனர். ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அதிமுக மற்றும் தினகரன் அணியினரால் அனுசரிக்கப்பட்டது. அண்ணா சாலையிலிருந்து அமைதிப்பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் கலந்துக்கொள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து தொண்டர்கள்

வேலையில்லா பட்டதாரிகள் போராட்டம் : மீண்டும் ஏமாற்றிய ஆளுநர்

Posted by - December 5, 2017

மட்டக்களப்பு வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று காலை 9 மணியளவில் முதலைகுடா மகா வித்தியாலயத்துக்கு முன்பாக முன்னெடுத்துள்ளனர்.பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் வருகை தருவதை அறிந்த பட்டதாரிகள் தங்களுக்கு நியமனங்களை வழங்க கோரி இந்த கவனயீர்ப்பு போர்ட்டத்தில் குதித்துள்ளனர். இருந்த போதிலும் குறித்த பாடசாலை நிகழ்வுக்கு ஆளுநர் சமூகமளிக்காத காரணத்தில் பட்டதாரிகள் ஏமாற்றத்துடன் தங்களது கவனயீர்ப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருகோணமலையில் கொட்டும் மலையிலும் தங்களது தொழிலுரிமை

வவுனியாவில் வீடு உடைத்து தங்க நகை கொள்ளை

Posted by - December 5, 2017

வவுனியா – குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து அங்கிருந்த தங்க நகைகளை இனந் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை வவுனியா – குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றில் வசிப்பவர்கள் வீட்டில் இல்லாத நிலையில் அவ் வீட்டின் பின் வேலி வழியாக உள் நுழைந்த இனந் தெரியாத நபர்கள் வீட்டுக் கதவை உடைத்து வீட்டிற்குள் இருந்த சங்கிலி, தோடு, மோதிரம் உள்ளிட்ட ஐந்து பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த

சர்வதேச பயங்கரவாதிகள் இலங்கைக்குள் வர முடியாது – சாகல

Posted by - December 5, 2017

சர்வதேச பயங்கரவாதம் இலங்கைக்குள் வருவதை தடுக்கும் நோக்கில் விசேட திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச பொலிஸார் (Interpol) ஏற்பாடு செய்திருந்த, சர்வதேச பயங்கரவாதத்தை தடுப்பது தொடர்பிலான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார். இதேவேளை, இலங்கையின் குடிவரவு குடியகல்வு அமைப்பை சர்வதேச பொலிஸாரின் தரவுத் தளத்துடன் தொடர்புபடுத்தி இருப்பதால், சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ள சர்வதேச பயங்கரவாதிகள் இலங்கைக்குள் உட்பிரவேசிக்க