அமெரிக்கா, தென்கொரிய விமானப் படை போர் பயிற்சி

388 0

ஐ.நா. சபையின் எச்சரிக்கையை மீறி வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதைத் தொடர்ந்து வடகொரியாவின் அச்சுறுத்தல்களைச் சமாளிக்க அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் முப்படைகளும் இணைந்து தனித்தனியாக போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வரிசையில் இருநாட்டு விமானப் படைகளும் நேற்று போர்ப் பயிற்சியை தொடங்கின. ஒரு வாரம் நடைபெறும் இந்த பயிற்சியில் இருநாடுகளையும் சேர்ந்த ஏராளமான போர் விமானங்கள் பங்கேற்றுள்ளன.

இதனிடையே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர் நிருபர்களிடம் கூறியபோது, வடகொரியாவுடனான போர் அபாயம் அதிகரித்து வருகிறது. இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள அமெரிக்க வேகமாகச் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

வடகொரிய அரசு ஊடகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், எதிரிகளின் விமானப் படை போர்ப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அணு ஆயுத போருக்கு அவர்கள் வித்திட்டு வருகிறார்கள் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a comment