வவுனியாவில் வீடு உடைத்து தங்க நகை கொள்ளை

283 0

வவுனியா – குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து அங்கிருந்த தங்க நகைகளை இனந் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மாலை வவுனியா – குட்செட் வீதியில் உள்ள வீடு ஒன்றில் வசிப்பவர்கள் வீட்டில் இல்லாத நிலையில் அவ் வீட்டின் பின் வேலி வழியாக உள் நுழைந்த இனந் தெரியாத நபர்கள் வீட்டுக் கதவை உடைத்து வீட்டிற்குள் இருந்த சங்கிலி, தோடு, மோதிரம் உள்ளிட்ட ஐந்து பவுண் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment