நாட்டை பிரிப்பதற்கு எதிராகவே எமது போராட்டம் – கோத்தாபய

Posted by - December 6, 2017

நாட்டை பிரிப்பதற்கு எதிராகவே தமது போராட்டம் இருப்பதாகவும் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கவிட்டால் நாடு பாரிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும் எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அதிகாரப்பகிர்வின் மூலம் இந்நாட்டில் வேறொரு அரசை நிறுவ முயற்சிப்பதாகவும், நூற்றுக்கு 68 வீதமான மக்கள் வேறு பிரதேசங்களில் இருப்பதாகவும் குறித்த பிரதேசத்திற்கு மாத்திரம் அதிகாரப்பகிர்வு வழங்குவதன் மூலம் ஏனைய மக்களின்

உப பொலிஸ் பரிசோதகர்கள் 3029 பேருக்கு பதிவு உயர்வு

Posted by - December 6, 2017

உப பொலிஸ் பரிசோதகர்கள் 3029 பேருக்கு பதிவு உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க மேற்கொண்ட நடவடிக்கைமைய இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பொலிஸ் சேவையில் சிக்கலாக காணப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர்களின் பதவி உயர்வு நடைமுறையை முறையாக மற்றும் விரைவாக மேற்கொள்ள அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். அமைச்சர் சாகல ரத்நாயக்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த

தனியார் வைத்தியசாலைகள் மூலம் அவசர இருதய சத்திர சிகிச்சை

Posted by - December 6, 2017

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சிகிச்சை பிரிவில் இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படும் பிரிவுகள் இரண்டும் நவீனமயப்படுத்தப்படவுள்ளது. அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய இருதய சத்திரசிகிச்சைகளை அரசாங்கத்தின் செலவில் தனியார் வைத்தியசாலைகளில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் வசதிகளை செய்யவுள்ளது. இதன் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திர சிகிச்சை இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைவாக தேசிய வைத்தியசாலையிலுள்ள நோயாளர்கள் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு இருதய சத்திர சிகிச்சைக்காக இடம்மாற்றப்பட்டுள்ளனர். எனினும், இது முழுமையான தீர்வாக அமையவில்லை. இதன் காரணமாக அவரச சத்திர சிகிச்சை

வெளிநாட்டு நாடகங்கள், திரைப்படங்களுக்கான வரியை அதிகரிக்க நடவடிக்கை-மங்கள

Posted by - December 6, 2017

வெளிநாட்டு தொலைக்காட்சி நாடகங்கள், படங்கள் மற்றும் வர்த்தக நிகழ்ச்சிகளின் மீது விதிக்கப்படுகின்ற வரியினை அதிகரிப்பதற்கு 2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டது. அதனடிப்படையில், குறித்த வரியினை திருத்தம் செய்து 2006ம் ஆண்டு 11ம் இலக்க நிதிச்சட்டத்தின் கீழ் குறித்துறைக்கப்பட்டுள்ள 2044/21ம் இலக்க 2017-11-07ம் திகதிய வர்த்தமானி அறிவித்தலினை அங்கீகாரத்தினை பெற்றுக் கொள்வதற்காக வேண்டி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உள்நாட்டு தொலைக்காட்சி

கோத்தா மீதான நடவடிக்கைக்கான தடைக்கு கடும் ஆட்சேபம்!

Posted by - December 6, 2017

பொதுச் சொத்து துஷ்பிரயோகச் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்  கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் எடுக்க வேண்டாம்

போருக்கு மத்தியிலும் புலிகள் தன்னிறைவுப் பொருளாதாரத்தை ஏற்படுத்தியிருந்தார்கள்! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

Posted by - December 6, 2017

போருக்கு மத்தியிலும் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தன்னிறைவுப் பொருளாதாரத்தை ஏற்படுத்தியிருந்தார்கள் என பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்து பேசும் போது மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். வட மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கரிகாலைநாகபடுவான் மற்றும் வலைப்பாடு பிரதேசங்களைச் சேர்ந்த 19 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியாக

மாங்குளம் பொலிசாரினால் வாகனங்கள் மறித்து சோதனையிடும் நடவடிக்கை

Posted by - December 6, 2017

மாங்குளம் பொலிசாரினால் நேற்றைய தினம் வாகனங்கள் மறித்து சோதனையிடும் நடவடிக்கை ஒன்று இடம்பெற்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அண்மைய காலங்களில் வடக்கில் போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத தொழில்கள் கலாச்சார சீரழிவு நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன. அந்தவகையில் விசேடமாக போதைப்பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் மாங்குளம் நகர்ப்பகுதியில் யாழ்ப்பாணம் இருந்து வவுனியா நோக்கி சென்ற அனைத்து பேருந்துகள் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தி சோதனையிட்டதோடு பயணிகளின் பயணப்பைகளும் சோதனையிடப்பட்டது. இந்தவகையில் அண்மையில் தொடர்ச்சியாக கஞ்சா உள்ளிட்டவை பொலிசாரிடம் மாட்டிவரும்

கிளிநொச்சியில் சர்வதேச மாற்று திறனாளிகள் விழா

Posted by - December 6, 2017

சர்வதேச மாற்று திறனாளிகள் விழா இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி கல்வி வலய விசேட கல்வி பிரிவும், டெப்லிங் நிறுவனமும் இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். கிளிநொச்சி டிப்போ சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு  நடை பயணம் கூட்டுறவு சபை மண்டபம் வரை சென்றது. தொடர்ந்து மாற்று திறனாளிகளின் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் அழைத்து செல்லப்பட்டதை அடுத்து நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக மெதடிஸ்த மிசன் திருச்சபையின் பேராயர் பேரருட் திரு ஆசிரி பெரேரா

மனைவி மீது தீ வைத்து கொலை; 10 ஆண்டுகள் சிறை

Posted by - December 6, 2017

மனைவி மீது தீவைத்துக் கொலை  செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வடமராட்சி, குடத்தனையில் மனைவியின் உடலில் தீப்பற்றவைத்து கொலை செய்த குற்றத்துக்கு குடும்பத்தலைவருக்கு 10 ஆண்டுகள் கடுழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். வடமராட்சி, மணற்காடு – குடத்தனையில் 2013ஆம் ஆண்டு டிசெம்பர் 3ஆம் திகதி ஞானதாஸ் மேரி ஜிமில்டா (வயது -24) என்ற இளம் குடும்பப் பெண் உடலில் தீக்காயங்களுடன்

காலியில் வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து

Posted by - December 6, 2017

காலி கழுவெல்லை பிரதேசத்தில் இன்று காலை 9 மணியளவில் மூன்று மாடிகளைக் கொண்ட ஆடை விற்பனைக் கடை ஒன்றில் தீபரவல் ஏற்பட்டுள்ளது. காலி மாநாகரசபையின் தீயனைப்புப் பிரிவினர் தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். குறித்த தீப்பரவலில் ஆடை விற்பனைக் கடை முழுமையாக சேதமடைந்து உள்ளதாகவும் தீயினால் எற்பட்டுள்ள இழப்புக்கள் குறித்து இதுவரை மதிப்பிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.