தாய்லாந்தின் முன்னாள் பிரதமரை கைது செய்ய உத்தரவு

207 0

விவசாயிகளிடம் இருந்து அதிக விலையில் நெல்கொள்முதல் செய்த விவகாரத்தில், ஊழல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டதை தொடர்ந்து பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

அவர் மீதான வழக்கு விசாரணைகள் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

இன்று நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகாதததை தொடர்ந்தே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அவரின் வழக்கறிஞர், யிங்க்லக் சினவர்டா உடல் நலக்குறைவால் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை என  நீதிமன்றில் அறிவித்திருந்த போதிலும் அவர் தொடர்பில் மருத்துவ அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்கவில்லை.

மேலும் யிங்க்லக் சினவர்டா தாய்லாந்தில் அல்லது வெளிநாடுகளில் இருக்கிறாரா ? என்பது தொடர்பில் தனக்கு தெரியாது என்றும் அவரது வழக்கறிஞர்  தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவினை தொடர்ந்து 3 ஆயிரம் பொலிஸார் அந்நாட்டு வீதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave a comment