ஆப்கானிஸ்தான் போரில் தலிபான்களால் வெற்றிபெற முடியாது

222 0

ஆப்கானிஸ்தான் போரில் தலீபான் தீவிரவாதிகளால் வெற்றிபெற முடியாது எனவும் அவர்கள் அமைதி பேச்சுவார்த்தைக்க வர வேண்டும் என அந்நாட்டில் உள்ள அமெரிக்க இராணுவ தளபதி ஜான் நிக்கல்சன் தெரிவித்துள்ளார்.

ஜான் நிக்கல்சன் கடந்த வருடம் விடுத்த வேண்டுகோளின்படி ஆப்கானிஸ்தானிற்கு கூடுதலான இராணுவ வீரர்களை அனுப்ப அமெரிக்க  ஜனாதிபதி டிரம்ப்  அனுமதி வழங்கியுள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்துள்ள நிக்கல்சன், தீவிரவாதிகளால் வெற்றிபெற முடியாது என்பதை உணர்ந்து அவர்கள் அமைதிக்கு திரும்ப வேண்டும். மேலும் தங்களுடைய ஆயுதங்களை கைவிட்டுவிட்டு ஆப்கானிஸ்தானின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உதவி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment