ஆளும் இரண்டு பிரதான கட்சிகள் மீதும் சம்பந்தன் குற்றச்சாட்டு

307 0

ஆட்சியில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளுக்கும் நாட்டுக்காக சேவையாற்ற வேண்டும் என்ற தேவையுடன் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அச்சு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இரண்டு பிரதான கட்சிகளுக்கும் போதிய பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினாலேயே தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டது.

நாட்டின் நலனை கருத்திற்கொண்டு ஏதேனும் திட்டம் ஒன்று கொண்டுவரப்படுகின்றபோது இரண்டு பிரதான கட்சிகளும் அதனை புரிந்துணர்வுடன் ஏற்று செயற்படுவது அவசியமாகும்.

தேசத்தின் நலத்திற்கான திட்டங்களை கருத்தில் கொண்டு செயற்படுவது காலத்தின் அவசியமாகும்.

அவ்வாறு இல்லாவிட்டால் அரசாங்கம் மக்களின் அதிருப்தி;க்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும்.

தற்போது அவ்வாறான ஒரு சூழல் தோன்றியுள்ளது.

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த நலையில், அரசாங்கம், மக்களுக்கு எந்த பயனும் அற்ற வகையில் வெறுமனே முன்கொண்டு செல்லப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Leave a comment