ஹம்பாந்தொட்டை துறைமுக உடன்படிக்கை – சீன நிறுவனத்துக்கே அதிகமான அதிகாரங்கள்

376 0

ஹம்பாந்தொட்டை துறைமுக உடன்படிக்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்தில் அதன் உரிமை இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு உள்ளதாக குறிப்பிடப்பட்டபோதும், நேற்று கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையில் அதிகமான அதிகாரங்கள் சீன நிறுவனத்துக்கே காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய சுதந்திர முன்னணியின் பிரதித் தலைவர் ஜயந்த சமரவீர இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதனால் நேற்று கைச்சாத்திடப்பட்ட துறைமுக உடன்படிக்கையானது சட்டபூர்வமானதல்லவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகமானது இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் மூலம் அந்த தாக்கத்தில் இருந்து மீள்வதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பு அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியொன்றின் கீழ் ஹம்பந்தோட்டை துறைமுகம் மீண்டும் மக்கள் உடமையாக்கப்படும் என கம்பஹ உடுகம்பொல பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave a comment